பாடல் #7193
எந்த நன்மையும் என்னில் இல்லையே
🔤 Endha Nanmaiyum Ennil Illaiyae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்த நன்மையும் என்னில் இல்லையே தேவா என்னையும் நீர் நேசிக்க எந்த மேன்மையும் என்னில் இல்லையே தேவா என்னையும் நீர் நினைக்க அழகுமில்லை ஆஸ்தியுமில்லை ஆனாலும் என்னை நீர் அழைத்தீர் படிப்புமில்லை பட்டமுமில்லை ஆனாலும் என்னை நீர் பிடித்துக் கொண்டீர் உந்தன் அன்பு உயர்ந்ததைய்யா உந்தன் ஞானம் சிறந்ததைய்யா ஞானியுமல்ல மேதையுமல்ல பேதையாம் என்னை தேடிவந்தீர் பெலவான் அல்ல கனவானுமல்ல பெலவீனன் என்னையும் தெரிந்து கொண்டீர் ஜீவனும் உமக்கே வாழ்வும் உமக்கே அர்ப்பணம் செய்தேன் அனைத்தும் உமக்கே வாழ்கின்ற வரையில் உம்புகழ் சொல்வேன் இயேசுவே உம்மை என்றும் நேசிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endha Nanmaiyum Ennil Illaiyae Thaevaa Ennaiyum Neer Naesikka Endha Maenmaiyum Ennil Illaiyae Thaevaa Ennaiyum Neer Ninaikka Azhakumillai Aasthiyumillai Aanaalum Ennai Neer Azhaittheer Patippumillai Pattamumillai Aanaalum Ennai Neer Pititthuk Konteer Undhan Anpu Uyarndhathaiyyaa Undhan Njaanam Sirandhathaiyyaa Njaaniyumalla Maethaiyumalla Paethaiyaam Ennai Thaetivantheer Pelavaan Alla Kanavaanumalla Pelaveenan Ennaiyum Therinthu Konteer Jeevanum Umakkae Vaazhvum Umakkae Arppanam Seythaen Anaitthum Umakkae Vaazhkindra Varaiyil Umpugazh Solvaen Yesuvae Ummai Enrum Naesippaen