பாடல் #7187
கழுகைபோல எழும்பிடுவோம்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
கழுகைபோல எழும்பிடுவோம் கர்த்தருக்காக பறந்திடுவோம் சிகரங்களை நாம் கடந்திடுவோம் இயேசுவுக்காக ஜொலித்திடுவோம் வாழ்க்கை என்பது ஒன்றே ஒன்றுதான் முற்றும் முழுவதும் நம் இயேசுவுக்காகத்தான் கடந்ததை முற்றும் மறந்திடுவோம் இலக்கை நோக்கி தொடர்ந்திடுவோம் சாத்தான் சதிகளை தகர்த்திடுவோம் சரித்திரம் படைக்கும் சாட்சியாவோம் ஆவி ஆத்மா சரீரமெல்லாம் அர்ப்பணம் செய்தே வாழ்ந்திடுவோம் பாரில் ஜீவன் மடியும் வரை பரிசுத்தம் என முழங்கிடுவோம் உலகை கலக்கும் சீடர்களாய் உன்னத சேவை செய்திடுவோம் அகிலம் ஆளும் ஆண்டவரின் அன்பை சொல்ல புறப்படுவோம்