பாடல் #7124
திறப்பின் வாசல் நிற்கின்றேன்
🔤 Thirappin Vaasal Nirkinraen
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திறப்பின் வாசல் நிற்கின்றேன் சுவரை அடைக்க வருகின்றேன் அழிவின் வழியை நாடுவோர் ஆயிரம் ஆயிரமே பரலோக பாதை செல்ல மறந்தோர் ஆயிரம் ஆயிரமே சீயோனின் மந்தைகள் கள்ளர்களால் சிதறி போகின்றதே நல் மேய்ப்பரே உம் மந்தைகளை – நீர் தேடி மீட்டிடுமே கோதுமை மணிகள் மத்தியிலும் களைகள் பெருகுதே தங்கத்திற்கொப்பான சீயோன் குமாரர் களிமண் போலானார்கள் சீயோனே இன்றே எழும்பிடு வல்லமை தரித்துக்கொள் மேகங்கள் மீது மணவாளன் இயேசு வந்திடும் நாள் சமீபம் இரவும் பகலும் கண்ணீர் சிந்தி கதறி ஜெபம் செய்வோம் இந்நிலை கண்டும் தாமதம் கொண்டால் குற்றம் நம் மீதல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirappin Vaasal Nirkinraen Suvarai Ataikka Varukinraen Azhivin Vazhiyai Naatuvor Aayiram Aayiramae Paraloga Paathai Sella Maranthor Aayiram Aayiramae Seeyonin Manthaigal Kallarkalaal Sidhari Pokindrathae Nal Maeypparae Um Manthaigalai – Neer Thaeti Meettitumae Kothumai Manigal Matthiyilum Kalaigal Perukuthae Thanggatthirkoppaana Seeyon Kumaarar Kaliman Polaanaarkal Seeyonae Inrae Ezhumpitu Vallamai Tharitthukkol Maeganggal Meethu Manavaalan Yesu Vanthitum Naal Sameebam Iravum Pakalum Kanneer Sinthi Kathari Jebam Seyvom Innilai Kantum Thaamatham Kontaal Kurtram Nam Meedhallo