பாடல் #7097
குணப்படு பாவி தேவ கோபம்
🔤 Kunappatu Paavi Thaeva Kobam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குணப்படு பாவி தேவ கோபம் வரும் மேவி - இப்போ கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் காலமிருக்கையில் சீலமதாக நீ 1. கர்த்தனை நீ மறந்தாய் அவர் கற்பனையைத் துறந்தாய் பக்தியின்மை தெரிந்தாய் பொல்லாப் பாவ வழி திரிந்தாய் புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடிவா உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார் 2. துக்கமடையாயோ? பாவி துயரமாகாயோ? மிக்கப் புலம்பாயோ? மனம் மெலிந்துருகாயோ? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? 3. தாவீ தரசனைப்போல் - தன்னைத் தாழ்த்தும் மனாசேயைப் போல் பாவி மனுஷியைப்போல் மனம் பதைத்த பேதுருபோல் தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி 4. உன்னை நீ நம்பாதே இவ்வுலகையும் நம்பாதே பொன்னை நீ நம்பாதே எப்பொருளையும் நம்பாதே தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் நின்னையும் ரட்சிப்பார் அன்னவரைப்பற்று 5. வேதத்தில் உந்தனைப் பார் அந்த வேத விதிப்படி நேர் நீதியைச் செய்தவனார்? தூய நின்மலன் வாக்கதோ கூர் தீதுறும் பாவியின் தீமையறிந்து கொள் நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kunappatu Paavi Thaeva Kobam Varum Maevi - Ippo Kanappozhuthinil Kaayam Marainthupom Kaalamirukkaiyil Seelamathaaga Nee 1. Kartthanai Nee Maranthaay Avar Karpanaiyaith Thuranthaay Pakthiyinmai Therinthaay Pollaap Paava Vazhi Thirinthaay Putthiketta Aattuk Kuttiyae Otivaa Utthama Maeyppanaar Katthi Yazhaikkiraar 2. Thukkamataiyaayo? Paavi Thuyaramaakaayo? Mikkap Pulampaayo? Manam Melinthurukaayo? Ikkanam Paavak Kasappai Yunaraayo? Thakka Arumaraip Pakkan Thodaraayo? 3. Thaavee Tharasanaippol - Thannaith Thaazhtthum Manaasaeyaip Pol Paavi Manushiyaippol Manam Pathaittha Paethurupol Devanukkaerkaadha Theemaiseythaenenru Koovip Pulampu Nal Aaviyin Sorpati 4. Unnai Nee Nampaathae Ivvulakaiyum Nampaathae Ponnai Nee Nampaathae Epporulaiyum Nampaathae Thannaip Paliyittuth Tharani Meettavar Ninnaiyum Ratsippaar Annavaraipparru 5. Vaedhatthil Undhanaip Paar Andha Vaedha Vithippati Naer Neethiyaich Seythavanaar? Thooya Ninmalan Vaakkatho Koor Theethurum Paaviyin Theemaiyarinthu Kol Naadhan Kiristhu Ippothae Uraikkiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm(D#) (G#) A#m(C Fm) Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm Fm A#m Fm D# G# C Fm Fm C# D# C Fm