பாடல் #707
இமால்ய மலை ஏறி தேசாந்தம்
🔤 Imaalya Malai Aeri Thaesaandham
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இமால்ய மலை ஏறி தேசாந்தம் நோக்குமேன்! வங்காள கடல் தாண்டி மேற்றிசை வாருமேன்! இத்தேசத்தார் எல்லாரும் அஞ்ஞான பாசத்தால் கட்டுண்டு போனார் பாரும் மெய்யறிவின்மையால். 2. இச்செல்வ தேசம் எங்கும் மா செழிப்பாயினும் நற்கந்தம் வீசுகின்ற இலங்கைத் தீவிலும் ஐயோ! தீயோரின் நெஞ்சு துர்கந்த முள்ளதால் பாதாளத் தீயில் வீழ்ந்து மாள்வாரே பாவத்தால். 3. ஐரோப்பா ஆசியாவும் ஆப்ரிக்கா கண்டமும் எத்திசை தேசம் தீவும் பூலோகம் அனைத்தும் இம்மானுவேலைச் சேரும் சுதந்திர சொந்தமாய் மெய்மார்க்கம் வளர்ந்தோங்கும் மகா ப்ரபல்யமாய். 4. யேசுவினாலுண்டான நற் செய்தி கூறுவோம்! பேரன்பின் மகத்தான மெய்ச்சுடர் காட்டு;வோம் பூலோக மெங்குமாக பேரொளி வீசவே நல் மீட்பர் ராஜாவாக வந்தரசாள்வாரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Imaalya Malai Aeri Thaesaandham Nokkumaen! Vangkaala Katal Thaanti Maerrisai Vaarumaen! Itthaesatthaar Ellaarum Anjnjaana Paasatthaal Kattuntu Ponaar Paarum Meyyarivinmaiyaal. 2. Ichselva Thaesam Engkum Maa Sezhippaayinum Narkandham Veesukindra Ilangkaith Theevilum Aiyo! Theeyorin Nenjsu Thurkandha Mullathaal Paathaalath Theeyil Veezhnthu Maalvaarae Paavatthaal. 3. Airoppaa Aasiyaavum Aaprikkaa Kandamum Etthisai Thaesam Theevum Poologam Anaitthum Immaanuvaelaich Saerum Sudhanthira Sondhamaay Meymaarkkam Valarnthongkum Makaa Prapalyamaay. 4. Yaesuvinaaluntaana Nar Seythi Kooruvom! Paeranpin Makatthaana Meychsudar Kaattu;vom Poologa Mengkumaaga Paeroli Veesavae Nal Meetpar Raajaavaaga Vandharasaalvaarae.