பாடல் #6935
கடைசி நாட்களிலே
🔤 Kataisi Naatkalilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடைசி நாட்களிலே கடாட்சிக்கும் தேவன் அவர் மாமிசமானவர் யாவரின் மேலும் மாரியைப் பொழிவேன் என்றார் – அருள் மாரியைப் பொழிவேன் என்றார் பெருமழையின் இரைச்சல் பெருந்தொனியாய் முழங்க பெருகிடும் கிருபை அறுவடைக்கென்றே அருள்மாரி பொழியும் என்றார்-இன்று அருள்மாரி பொழியும் என்றார் – 2 தரிசனம் கண்டிடுவார் கரிசனை உள்ளோரெல்லாம் பரிசுத்தவான்கள் கூடி மகிழ்வார் மாரிதனைக் கண்டபின் – அருள் மாரிதனைக் கண்டபின் முழங்காலில் நின்றோரெல்லாம் முழங்கிடுவார் அன்று முழங்கால்கள் மடங்கும் இயேசுவின் நாமம் தளங்களை நிரப்பி விடும் – பணித் தளங்களை நிரப்பி விடும் இந்தியாவின் மண்ணிலே சிந்திய கண்ணீரெல்லாம் பந்தி பந்தியாய் திருப்பணிக்கென்றே தந்தோரை எழுப்பிவிடும் – தம்மை தந்தோரை எழுப்பிவிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kataisi Naatkalilae Kataatsikkum Devan Avar Maamisamaanavar Yaavarin Maelum Maariyaip Pozhivaen Enraar – Arul Maariyaip Pozhivaen Enraar Perumazhaiyin Iraicchal Perunthoniyaay Muzhangga Perukitum Kirupai Aruvataikkenrae Arulmaari Pozhiyum Enraar-inru Arulmaari Pozhiyum Enraar – 2 Tharisanam Kantituvaar Karisanai Ullorellaam Parisutthavaankal Kooti Makizhvaar Maaridhanaik Kandapin – Arul Maaridhanaik Kandapin Muzhangkaalil Ninrorellaam Muzhangkituvaar Anru Muzhangkaalkal Matangkum Yesuvin Naamam Thalanggalai Nirappi Vitum – Panith Thalanggalai Nirappi Vitum Inthiyaavin Mannilae Sinthiya Kanneerellaam Panthi Panthiyaay Thiruppanikkenrae Thanthorai Ezhuppivitum – Thammai Thanthorai Ezhuppivitum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em A F# Bm D Em Bm A Em A D D G A D D G Bm A Em A D D G A D D G Bm A Em A D D G A D D G Bm A Bm A D D G A D D G Bm A Bm A D