பாடல் #686
எனது உள்ளம் யாருக்கு
🔤 Enathu Ullam Yaarukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனது உள்ளம் யாருக்கு தெரியும் – இயேசையா எனது நினைவு யாருக்கு புரியும் என்னை நீர் அறிவீரே உம்மை நான் அறிவேனே என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே – இயேசையா 1. அன்னை தந்தை அறியவில்லையே – என் உள்ளம் தன்னை புரிந்து கொள்ள முடியவில்லையே என்னை அறிந்த தெய்வம் நீரையா – என் உள்ளம் புரிந்த அன்னை நீரையா — எனது 2. மனிதனோ முகத்தை பார்க்கிறான் நீரோ என் உள்ளமதை அறிந்து பார்க்கிறீர் நொருங்கி போன எனது உள்ளத்தை அரவணைத்து காயம் ஆற்றினீர் — எனது 3. ஊரும் உறவும் என்னை வெறுத்தது என் உள்ளம் நொந்து சோகமானது என் உள்ளம் அறிந்து ஓடி வந்தீரே ஆற்றி தேற்றி அணைத்துக் கொண்டீரே — எனது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enathu Ullam Yaarukku Theriyum – Yesaiyaa Enathu Ninaivu Yaarukku Puriyum Ennai Neer Ariveerae Ummai Naan Arivaenae Ennai Purinthu Konda Theyvam Neerae – Yesaiyaa 1. Annai Thanthai Ariyavillaiyae – En Ullam Thannai Purinthu Kolla Mutiyavillaiyae Ennai Arindha Theyvam Neeraiyaa – En Ullam Purindha Annai Neeraiyaa — Enathu 2. Manidhano Mugatthai Paarkkiraan Neero En Ullamathai Arinthu Paarkkireer Norungki Pona Enathu Ullatthai Aravanaitthu Kaayam Aarrineer — Enathu 3. Oorum Uravum Ennai Verutthathu En Ullam Nonthu Sogamaanathu En Ullam Arinthu Oti Vantheerae Aarri Thaerri Anaitthuk Konteerae — Enathu