பாடல் #6842
எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே
🔤 Em Uyarndha Vaasasthalam Athuvae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எம் உயர்ந்த வாசஸ்தலம் அதுவே எம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னத்தத்தில் வாழ்வோம் இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே பிதா முகம் காண்போம் ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன் இயேசுவின் மேல் நின்ற வீடாய் நாம் விளங்கிடுவோம் அன்பில் பூரணமே அதிலே பயமில்லையே அன்பர் இயேசுவுடன் அதை நாடி பெற்றிடவே ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே ஆ! பேரின்ப ஆத்மா வாழ்வில் ஆனந்தம் கொள்வோம் மா சமாதானமே விசுவாச நம்பிக்கையே மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம் ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம் பாவ சாபங்களும், புவி ஆசையும் ஜெயித்தோர் பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம் வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார் வாஞ்சையாய் சபையாய் அன்று இயேசுவை சந்திப்போம்- மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம் மத்திய வான விருந்தில் பங்கடைந்திடுவோம் வாலையும் சுழற்றி வலுசர்ப்பம் தோன்றிடுதே வீர ஆண்பிள்ளையை விழுங்க வகைதேடுதே வான அக்கினியால் அதைத்தீக் கொளுத்திடுவோம் வல்லமை மிகுந்த கர்த்தர் இயேசு நாமத்திலே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Em Uyarndha Vaasasthalam Athuvae Em Poorana Seeyonae Kanmalaiyin Maelae Kazhukupol Unnatthatthil Vaazhvom Yesu Paktharkalae Jeyam Perrae Pithaa Mugam Kaanpom Njaanak Kanmalaiyae Kiristhaesu Em Aranae Vaana Seeyonilae Avar Aaviyaal Piranthom Aezhu Thoonkaludan Thida Asthipaaramudan Yesuvin Mael Nindra Veetaay Naam Vilangkituvom Anpil Pooranamae Athilae Payamillaiyae Anbar Yesuvudan Athai Naati Perridavae Aaviyaal Nirainthae Avar Anpilae Natanthae Aa! Paerinba Aathmaa Vaazhvil Aanandham Kolvom Maa Samaathaanamae Visuvaasa Nampikkaiyae Maa Parisutthamae Maranatthin Paatugalae Thaeva Saayalumae Nammil Pooranam Ataiya Thooya Vaazhvai Naati Naam Munnaeriyae Selvom Ottamae Jeyamaay Naamum Otiyae Mutikka Ovvoru Thinamum Puthiya Pelanataivom Paava Saabanggalum, Puvi Aasaiyum Jeyitthor Paazhulakai Vaegam Thaanti Akkarai Saervom Vaananggal Vazhiyae Irangki Paran Varuvaar Vaanjsaiyaay Sapaiyaay Anru Yesuvai Santhippom- Meetpin Naal Nerungga Thalaigal Uyartthituvom Matthiya Vaana Virunthil Panggatainthituvom Vaalaiyum Suzharri Valusarppam Thonrituthae Veera Aanpillaiyai Vizhungga Vakaithaetuthae Vaana Akkiniyaal Athaittheek Kolutthituvom Vallamai Mikundha Kartthar Yesu Naamatthilae.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C
D G G C
B7 Em A
G C
D7
G C D Bm
G Am D G
G C B Em
Am D G
G C D Bm
G Am D G
G C B Em
Am D G