பாடல் #6830
என்னோடிரும் மா தேச கர்த்தரே
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
Scale: F Major
Beat: Select
🎸 Chords Available
என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; நீர் பாவி நேசரே, என்னோடிரும். நீர் கூடநின்று அருள் புரியும்; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F F Dm Am Bb F F C Bb F G C F Am Dm F Bb Gm C F Bb Am Bb C F