பாடல் #683
இன்ப துன்ப நேரத்திலும்
🔤 Inba Thunba Naeratthilum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப துன்ப நேரத்திலும் உன் அன்புள்ள யேசுவைப் பார். 1. இன்பத்தினால் அகமகிழ்ந்து க்லேசத்தினால் துக்கித்து சிற்றின்பப் பேருலகில் சிக்கிக் கொண்டு இருக்கும் போதும். 2. சோதனையால் பிடிப்பட்டு இடுக்கணில் இருக்கும் போதும் சாத்தான் உன்னை மேற்கொள்ள அக்னியாஸ்திரம் எறியும் போதும். 3. தோழரால் பகைக்கப் பட்டு மனக் கிலேசம் அடையும் போதும் உலகம் உன்னை இகழ்ச்சி செய்து தங்கள் இடத்தை விட்டோடும் போதும். 4. அவர் தாமே சோதிக்கப் பட்டு பாடு நமக்காய் பட்டதினால் அவர் சோதிக்கப் படும் நமக்கு உதவி செய்ய வல்லவராம். 5. வறுமையினால் யாசித்துப் பாடு மிகப் படும் போதும் சாத்தான் உன்னைப் பகடி பண்ணி உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும். 6. கடு நோயால் பெலன் குன்றிப் பெலவீனத்தால் தள்ளாடி ஜீவன் உனக்கு கசப்பாகி சாவை நீ விரும்பும் போதும் 7. பகைஞரால் கல்லெறியுண்டு மரண நேரம் கிட்டும் போதும் பக்தன் ஸ்தேவானைப் போல தைரியமாய் உன் யேசுவைப் பார். 8. நான் என் யேசுவின் தரிசனத்தை நிமிஷந்தோறும் காண்கிறதால் நான் தான் பயப்படாதிரு என்றவர் என்னைத் தேற்றுகிறார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Thunba Naeratthilum Un Anpulla Yaesuvaip Paar. 1. Inbatthinaal Agamakizhnthu Klaesatthinaal Thukkitthu Sirrinbap Paerulakil Sikkik Kontu Irukkum Pothum. 2. Sodhanaiyaal Pitippattu Itukkanil Irukkum Pothum Saatthaan Unnai Maerkolla Akniyaasthiram Eriyum Pothum. 3. Thozharaal Pakaikkap Pattu Manak Kilaesam Ataiyum Pothum Ulakam Unnai Igazhchsi Seythu Thanggal Idatthai Vittotum Pothum. 4. Avar Thaamae Sothikkap Pattu Paatu Namakkaay Pattathinaal Avar Sothikkap Patum Namakku Udhavi Seyya Vallavaraam. 5. Varumaiyinaal Yaasitthup Paatu Migap Patum Pothum Saatthaan Unnaip Pakati Panni Un Visuvaasatthaik Kuraikkum Pothum. 6. Katu Noyaal Pelan Kunrip Pelaveenatthaal Thallaati Jeevan Unakku Kasappaaki Saavai Nee Virumpum Pothum 7. Pakainjaraal Kalleriyuntu Marana Naeram Kittum Pothum Pakthan Sthaevaanaip Pola Thairiyamaay Un Yaesuvaip Paar. 8. Naan En Yaesuvin Tharisanatthai Nimishanthorum Kaankirathaal Naan Thaan Payappataathiru Endravar Ennaith Thaerrukiraar.