பாடல் #6797
என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
🔤 Enna Thiyaagam En Kalvaari Naayakaa
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன தியாகம், என், கல்வாரி நாயகா! என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ! விண் தூதர் போற்றிடும் உம் - பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே! மாட்டுக் கொட்டிலோ வாஞ்சித்தீரையா! மானிடர் மேல் அன்பினால் ஜெனித்த நாள் முதலாய் - கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை பாடுகள் உம் பங்காய்க் கண்டீரையா! பாவியை மீட்பதற்காய் தலையைச் சாய்த்திடவோ - உமக்கு ஓர் தலமோ எங்குமில்லை உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ! முன் பாதை காட்டினீரே தாய் தந்தை வீடும் நாடும் - இன்னும் தனக்குள்ளதெல்லாம் வெறுத்து அனுதினம் குருசை சுமப்பவரல்லோ! அப்போஸ்தலர் என்றீரே பாடுகளல்லோ உம்மை - மகிமையில் பூரணமாய்ச் சேர்த்ததே உம்மோடு நானும் பாடு சகிப்பேன்! என் ஜீவனையும் வைத்தே இன்பம் எனக்கினியேன் - என் அருமை இயேசுதான் என் பங்கல்லோ! நேசரின் பின்னே போகத்துணிந்தேன் பாசம் என்னில் வைத்ததால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Thiyaagam, En, Kalvaari Naayakaa! Ennaiyum Ummaippol Maarridavo! Vin Thoodhar Porritum Um - Pithaavaiyum Vittirangki Vantheerae! Maattuk Kottilo Vaanjsittheeraiyaa! Maanidar Mael Anpinaal Jenittha Naal Mudhalaay - Kalvaariyil Jeevanai Eeyum Varai Paatugal Um Pangkaayk Kanteeraiyaa! Paaviyai Meetpatharkaay Thalaiyaich Saaytthidavo - Umakku Or Thalamo Engkumillai Um Atichsuvattil Naan Sellavo! Mun Paathai Kaattineerae Thaay Thanthai Veetum Naatum - Innum Thanakkullathellaam Verutthu Anuthinam Kurusai Sumappavarallo! Apposthalar Enreerae Paatugalallo Ummai - Makimaiyil Pooranamaaych Saertthathae Ummotu Naanum Paatu Sakippaen! En Jeevanaiyum Vaitthae Inbam Enakkiniyaen - En Arumai Yesuthaan En Panggallo! Naesarin Pinnae Pogatthuninthaen Paasam Ennil Vaitthathaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em F G Dm G C C Am D F G C G Am F C D G C C Am D D F G C G Am F C D G C C Am D D F G C G Am F C D G C C Am D F G C G Am F C D G C C Am D F G C G Am F C D G C