பாடல் #6685
எந்நாளுமே துதிப்பாய்
🔤 Ennaalumae Thuthippaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே , நீ எந்நாளுமே துதிப்பாய் ! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது 1. பாவங்கள் எத்தனையோ - நினையா திருத்தாருன் பாவங்கள் எத்தனையோ ? பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி 2. எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை ? நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி , நேயமதாக ஜீவனை மீட்டதால் 3. நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே , பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை ; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு , ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் 4. பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே , பூமிக்கும் வானத்துக்கும் ; சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் சாலவும் தங்குமே , சத்திய மேயிது 5. மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவனருளும் மன்னிப்பு மாட்சிமையாம் ; எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ? எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே 6. தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு ? எந்த வேளையும் அவரோடு தங்கினால் , சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalumae Thuthippaay - Ennaatthumaavae , Nee Ennaalumae Thuthippaay ! Innaal Varaiyilae Unnathanaar Seytha Ennillaa Nanmaigal Yaavu Maravaathu 1. Paavanggal Etthanaiyo - Ninaiyaa Thirutthaarun Paavanggal Etthanaiyo ? Paazhaana Noyai Agarrik Kunamaakkip Paarinil Vaittha Makaa Thaya Vaienni 2. Etthanaiyo Kirupai - Unnuyirkkuch Seythaarae Etthanaiyo Kirupai ? Nitthamunaimuti Soottinathumanri , Naeyamathaaga Jeevanai Meettathaal 3. Nanmaiyaalun Vaayai - Niraitthaarae , Poortthiyaay Nanmaiyaalun Vaayai ; Unvayathu Kazhukaippol Palangkontu , Ongku Ilamaipo Laagavae Seythathaal 4. Poomikkum Vaanatthukkum - Ulla Thooram Polavae , Poomikkum Vaanatthukkum ; Saami Payamullavar Mael Avar Arul Saalavum Thangkumae , Satthiya Maeyithu 5. Mannippu Maatsimaiyaam - Maadevanarulum Mannippu Maatsimaiyaam ; Ennuvaayo Kizhakku Maerkin Thooramae ? Ennil Unpaavam Agandrathatthooramae 6. Thanthaidhan Pillaigatku - Thayavo Tirangkaano Thanthaidhan Pillaigatku ? Endha Vaelaiyum Avarotu Thangkinaal , Sondham Paaraattiyae Thookkich Sumappaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C C Dm C Am Em F C Dm C Em Am F G C Em F C D Em C