பாடல் #655
இந்தநாள் ரட்சிப்புக்
🔤 Indhanaal Ratsippuk
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள், ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள். சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து, - இந் 1.சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன்; - தேவ சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்; - இந் 2.வாடித் திகைத்துப் புலம்பாதே; - உன்தன் மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே; - இந் 3.உலகச் சிநேகம் வெகு கேடு; - அதற் குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு; - இந் 4.இன்றுன் இரட்சகரிடம் திரும்பு; - அவர் இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு; - இந் 5.இனிமேலாகட்டும், என் றெண்ணாதே; - பவ இச்சைக் குட்பட்டால், திரும்ப ஒண்ணாதே; - இந் 6.கிறிஸ் தேசுவை உற்றுப் பாரு; - அவர் கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு; - இந் 7.பாவங்கள் அறச் சுத்திகரிப்பார்; - உனைப் பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார்; - இந் 8.மகிமை நிறைந்த கீரீடஞ் சூடி; - நித்திய வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி; - இந் 9.ஏசுபெருமானை நீ நம்பு; - அவர் என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு; - இந்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innaal Ratsippuk Kaertra Nal Naal, Aertra Nal Naal, Aertra Nal Naal. Sonnaar Kiristhunakkuk Kirupaiyaich Sorinthu, - In 1.santhoshandhanaich Solla Vanthaen; - Thaeva Samaathaana Vaartthaiyaip Pelanaagath Thanthaen; - In 2.vaatith Thikaitthup Pulampaathae; - Unthan Manathil Avisuvaasam Vaitthuk Kalangkaathae; - In 3.ulakach Sinaegam Veku Kaetu; - Adhar Kudanthaip Pataamal Jeeva Maarkkatthaith Thaetu; - In 4.inrun Iratsakaridam Thirumpu; - Avar Iyarrum Sampoorana Jeevanai Virumpu; - In 5.inimaelaagattum, En Rennaathae; - Pava Ichsaik Kutpattaal, Thirumba Onnaathae; - In 6.kiris Thaesuvai Urrup Paaru; - Avar Kirupaiyaaych Sinthina Ratthatthaich Saeru; - In 7.paavanggal Arach Sutthigarippaar; - Unaip Parisuttha Vasthiratthaal Alanggarippaar; - In 8.makimai Niraindha Keereedanj Sooti; - Nitthiya Vaazhvai Arulvaar Unakkinbang Kontaati; - In 9.aesuperumaanai Nee Nampu; - Avar Enrenraikkum Unak Kiratsippin Kompu; - In