பாடல் #649
இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே
🔤 Indha Vaelaiyinil Vandharulum Thaeva Aaviyae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன் ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள் ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம் சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Vaelaiyinil Vandharulum Thaeva Aaviyae – Ippo Enggal Meethirangkith Thangki Varam Thaarum Aaviyae Andhanar Thammidam Vinthai Seytha Sathyaaaviyae – Mun Aacchariyamaagak Kaatsi Thandha Njaana Aaviyae Archsiyark Kannaanil Arpudham Seythaanda Aaviyae – Indha Aathirai Meethinil Theedhakarriyaalum Aaviyae Aarumariyaadha Aarudhal Seythitum Aaviyae – Ingku Anjnjaanam Agarri Meynjnjaanam Pugattum Aaviyae Sittham Irangkaayo Nitthiyaraakiya Aaviyae – Arul Jeeva Vazhi Kaattip Paavam Agarritum Aaviyae Vaarum Vaarum Kanpaarum Parisuttha Aaviyae – Inru Vanthu Sapaimeethil Sinthai Vaittharulum Aaviyae Thaertraravaalan Enraerrip Pugazhnthitum Aaviyae – Nidham Sittham Vaitthen Meethil Murrilung Kaatthitum Aaviyae