பாடல் #6489
உன்னையன்றி வேறே கதி
🔤 Unnaiyanri Vaerae Kathi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமீ! தன்னையே பலியாக தந்த மண் உயிர் ரச்சகரே அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ? - அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ! - உன் 1. பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடி பாதகத்துக் குண்டோ எல்லை பரதவித்தேனே தேடி கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோ தான்? கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ! 2.அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோ! கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம்பாராய்க் கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபைவை யேசு ஸ்வாமீ! 3.எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி எவ்வளவு புத்திகேட்டும் அவ்வளவுக்கதி தோஷி பித்தனைப் போல பிதற்றிக் கத்தியே புலம்புமேழைப் பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்கவை யேசு ஸ்வாமீ! 4.கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டா லாவதென்ன கல்லைப்போல் கடினங்கொண்ட கர்ம சண்டாளன் பாழும் உள்ளமுங்கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால் உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமீ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaiyanri Vaerae Kethi Oruvarillaiyae Svaamee! Thannaiyae Paliyaaga Thandha Man Uyir Racchakarae Annai Thanthai Urraar Surraar Aarumudhavuvaro? - Athisaya Manuvaelaa! Aasai En Yaesu Svaamee! - Un 1. Pannina Thurogamellaam Enninaa Letthanaikoti Paadhakatthuk Kunto Ellai Parathavitthaenae Thaeti Kanninaalun Thiruvatik Kaana Naan Thakumo Thaan? Kataiyanukkarulpuri Matiyumun Yaesu Svaamee! 2.anjsiyanjsith Thoora Ninren Sanjjalanggalai Naan Solli Alaigatal Thurumpupol Malaivu Kontae Naanaiyo! Kenjsik Kenjsik Koovumindha Vanjjakan Mugampaaraayk Kitti Ennidam Saernthu Kirupaivai Yaesu Svaamee! 3.etthanai Karraalum Thaeva Pakthiyaethu Martra Paavi Evvalavu Putthikaettum Avvalavukkathi Thoshi Pitthanaip Pola Pidharrik Katthiyae Pulampumaezhaip Paethaiyaik Kataitthaerrip Pizhaikkavai Yaesu Svaamee! 4.kallanaam Kapatanennaith Thallivittaa Laavathenna Kallaippol Katinangkonda Karma Santaalan Paazhum Ullamunggarainthae Undran Uyar Siluvaiyinanpaal Ulaiyilitta Mezhukaay Urugavai Yaesu Svaamee!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C Gm C Dm Dm G Am Dm C G Dm C G Dm Gm Dm Dm Gm C Dm Dm Gm C Dm Dm G Am Dm G Am Dm G Am Dm Gm Dm Dm Gm C Dm Dm Gm C Dm Dm G Am Dm G Am Dm G Am Dm Gm Dm Dm Gm C Dm Dm Gm C Dm Dm G Am Dm G Am Dm G Am Dm Gm Dm