பாடல் #6444
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
🔤 Antho Kalvaariyil Arumai Iratsakarae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குறார் 1. மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே மாயலோகத்தோடழியாதூயான் தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே 2. அழகுமில்லை சௌந்தரியமில்லை அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க பல நிந்தைகள் சுமந்தாலுமே பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே 3. முள்ளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும் குருதி வடிந்தவர் தொங்கினார் வருந்தி மடிவோரை மீட்டிடவே 4. அதிசயம் இது இயேசுவின் தியாகம் அதிலும் இன்பம் அன்பரின் தியாகம் அதை எண்ணியே நிதம் வாழுவேன் அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே 5. சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே என்னைச் சேர்த்திட வருவேனென்றார் என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Antho Kalvaariyil Arumai Iratsakarae Sirumai Atainthae Thongkuraar 1. Makimai Maatsimai Maranthizhanthoraay Kotumai Kurusaith Therinthetutthaarae Maayalogatthodazhiyaathooyaan Thooya Kalvaariyin Anpai Antidavae 2. Azhakumillai Saundhariyamillai Andhak Kaeturraar Endhanai Meetka Pala Ninthaigal Sumanthaalumae Pathinaayiram Paerilum Sirandhavarae 3. Mullin Mutiyum Sevvangki Aninthum Kaal Karanggal Aanigal Paaynthum Kuruthi Vatindhavar Thongkinaar Varunthi Mativorai Meettidavae 4. Athisayam Ithu Yesuvin Thiyaagam Athilum Inbam Anbarin Thiyaagam Athai Enniyae Nidham Vaazhuvaen Avar Paathaiyai Naan Thodarnthaekidavae 5. Siluvaik Kaatsiyai Kantu Munnaeri Saevaiyae Purivaen Jeevanum Vaitthae Ennaich Saertthida Varuvaenenraar Enrum Unmaiyudan Nampi Vaazhnthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A
G D
G A D
D A Bm D
Bm A Em D
Bm A
G A A7 D
D A Bm D
Bm A Em D
Bm A
G A A7 D
D A Bm D
Bm A Em D
Bm A
G A A7 D
D A Bm D
Bm A Em D
Bm A
G A A7 D
D A Bm D
Bm A Em D
Bm A
G A A7 D