பாடல் #6380
இயேசுவே வழி சத்தியம்
🔤 Yesuvae Vazhi Satthiyam
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: C Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே வழி சத்யம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் இயேசுவே வழி சத்யம் ஜீவன் இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்குத் தந்தார் சமாதானம் நிறைவாய் அளித்தார் பாவங்கள் யாவும் மன்னித்தார் சாபங்கள் யாவும் தொலைத்தார் கல்வாரி மீதில் எனக்காய் தம் உதிரம் சிந்தி மரித்தார் மூன்றாம் நாளில் உயிர்த்தார் உன்னதத்தில் அமர்ந்தார் 2. நல் மேய்ப்பனாக காத்தார் என்னை தமையனாக கொண்டார் என் நண்பனாக வந்தார் என் தலைவனாக நின்றார் மேகங்கள் மீதில் ஓர் நாள் மணவாளனாக வருவார் என்னை அணைத்துக் கொள்வார் வானில் கொண்டு செல்வார் 3. உனக்காகத் தானே பிறந்தார் உனக்காகத் தானே வளர்ந்தார் உனக்காகத் தானே மரித்தார் உனக்காகத் தானே உயிர்த்தார் இன்றும் என்றும் நமக்காய் அவர் ராஜாவாக இருப்பார் மார்பில் என்றும் அணைப்பார் தூக்கி உன்னை சுமப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Vazhi Sathyam Jeevan Yesuvae Oli Nithyam Devan Yesuvae Vazhi Sathyam Jeevan Yesuvae Oli Nithyam Devan 1. Puthu Vaazhvu Enakkuth Thanthaar Samaathaanam Niraivaay Alitthaar Paavanggal Yaavum Mannitthaar Saabanggal Yaavum Tholaitthaar Kalvaari Meethil Enakkaay Tham Uthiram Sinthi Maritthaar Moonraam Naalil Uyirtthaar Unnathatthil Amarnthaar 2. Nal Maeyppanaaga Kaatthaar Ennai Thamaiyanaaga Kontaar En Nanpanaaga Vanthaar En Thalaivanaaga Ninraar Maeganggal Meethil Or Naal Manavaalanaaga Varuvaar Ennai Anaitthuk Kolvaar Vaanil Kontu Selvaar 3. Unakkaagath Thaanae Piranthaar Unakkaagath Thaanae Valarnthaar Unakkaagath Thaanae Maritthaar Unakkaagath Thaanae Uyirtthaar Inrum Enrum Namakkaay Avar Raajaavaaga Iruppaar Maarpil Enrum Anaippaar Thookki Unnai Sumappaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Am
C
F Dm
G7 C
C
C7 F
F Dm
G C
C Dm
G C
F
G C
C
C7 F
F Dm
G C
C Dm
G C
F
G C