பாடல் #636
தேவன் தங்கும் மாளிகை
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
1. தேவன் தங்கும் மாளிகை - அது தான் நான் இன்று - (2) தேவனே தங்குகிறார் தேவைகளை சந்திக்கிறார் -(2) 2. பரிசுத்தர் இயேசு என் தேவன் பரிசுத்த ஆலயம் நான்தானே -(2) பாவங்கள் முற்றும் மாற்றியே என்னை பரிசுத்த ஆவியால் தாங்குகின்றார்-(2) 3. வல்லவர் இயேசு என் தேவன் வல்லமையான ஆயுதம் நான் -(2) எய்திடுவார் வென்றிடுவேன் இன்றும் என்றும் அவர் தயவே-(2) 4. மணவாளன் இயேசு என் தேவன் மணவாட்டியாக ஆயத்தம் நான்-(2) சென்றிடுவேன் மணவாட்டியாய் வல்லவர் என்றும் என்னோடுதான்-(2)