பாடல் #6343
இயேசு ராஜனின் திருவடிக்கு
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: F Major
Beat: 2/4
🎸 Chords Available
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம் ஆத்மா நாதனின் மலரடிக்கு சரணம் சரணம் சரணம் 1. பார் போற்றும் தூய தூய தேவனே மெய் ராஜாவே எங்கள் நாதனே பயம் நீக்கும் துணை யாவும் ஆனீரே 2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே ஏழை என்னை ஆற்றி தேற்றி காப்பீரே 3. பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே ஆவி ஆத்துமா சரீரத்தை படைக்கிறேன் 4. உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் 5. அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன் மனதார உம்மை என்றும் போற்றுவேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb Dm Dm Gm C F F Bb Dm Dm Gm C F F Bb Am Am Gm C Bb F F Bb Dm F Bb Am Am Gm C Bb F F Bb Dm F Bb Am Am Gm C Bb F F Bb Dm F Bb Am Am Gm C Bb F F Bb Dm F Bb Am Am Gm C Bb F F Bb Dm