பாடல் #633
இத்தரைமீதினில்
🔤 Ittharaimeethinil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த உத்தமனே தோத்ரம்! நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச் சித்தங் கொள்வாயென்மீது தத்தஞ் செய்தேனிப்போது. - இத் 1. தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே வானே யிருந்துபுவி வந்த பெரும் பதமே மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே- இத் 2. கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ வேஷ மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ- இத் 3.அன்னையும் தந்தையும் ஆளும் பொருளும் நீயே ஆசாரியன் தீர்க்கன் ஆயினும் ஆடும் நீயே உன்னைப் பிரிந்தால் வேறு போக வழியிலையே உத்தம சத்திய முத்தே அதிபதியே- இத் 4.வானாசனத்திருந்து மனுக்குலத்தை நினைந்து தானாமனமுவந்து தாரணியில் பிறந்து கோனாய் விளங்காநிற்கும் குருவேசுநாதனை நான் ஏனோ மறந்து இங்கே வீணே தவிப்பது காண்- இத் 5.செஞ்சோதிபோன்ற அவன் சீர்பாதத்தை எந்நாளும் நெஞ்சாசனத்தில் வைத்து நீடுழிவாழ்த்தல் வேணும் பஞ்சாய்ப் பறந்திடுமென் பஞ்சபாதம் யாவும் அஞ்சேன் அஞ்சேனே தேவதஞ்சம் கண்டதே போதும் - இத்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ittharaimeethinil Vitthakanaa Yezhundha Utthamanae Thothram! Nitthamen Nirudhayam Sutthamaaga Vilanggach Sitthang Kolvaayenmeethu Thatthanj Seythaenippothu. - Ith 1. Thaenae, Kaniyae, Enrun Thigattaadha Amirthamae Theeyanen Manappunkal Aarritum Avizhthamae Vaanae Yirunthupuvi Vandha Perum Pathamae Maravaathu Thiruppugazh Varaivaen Nidham Nidhamae- Ith 2. Kannae Maniyae Unnaik Kandapin Vituvaeno Kaadhalaayp Pavatthilveen Kaalampin Nituvaeno Vinnae Unaimaranthu Vaeronraith Thotuvaeno Vaesha Maarkkam Natanthu Vaedhanaip Patuvaeno- Ith 3.annaiyum Thanthaiyum Aalum Porulum Neeyae Aasaariyan Theerkkan Aayinum Aatum Neeyae Unnaip Pirinthaal Vaeru Poga Vazhiyilaiyae Utthama Satthiya Mutthae Athibathiyae- Ith 4.vaanaasanatthirunthu Manukkulatthai Ninainthu Thaanaamanamuvanthu Thaaraniyil Piranthu Konaay Vilangkaanirkum Kuruvaesunaadhanai Naan Aeno Maranthu Ingkae Veenae Thavippathu Kaan- Ith 5.senjsothipondra Avan Seerpaadhatthai Ennaalum Nenjsaasanatthil Vaitthu Neetuzhivaazhtthal Vaenum Panjsaayp Paranthitumen Panjjapaadham Yaavum Anjsaen Anjsaenae Thaevathanjjam Kandathae Pothum - Ith