பாடல் #6310
அதிசயமான ஒளி மாய நாடாம்
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
Scale: G Major
Beat: 2/4
🎸 Chords Available
அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம் - நான் வாஞ்சிக்கும் நாடாம் 1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு - 2 நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா - அல்லேலூயா 2. சந்திர சூரியன் இல்லை ஆனால் இருள் ஏதும் காணவில்லை - 2 தேவகுமாரன் ஜோதியில் ஜோதி நித்திய வெளிச்சமவர் - என்றும் பகல் 3. விதவிதக் கொள்கையில்லை பலப்பிரிவுள்ள பலகை இல்லை - 2 ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம் - அன்புள்ளோர் செல்லும் 4. பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை - 2 மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை - அன்பே மொழி 5. பல பல திட்டம் இல்லை ஆளும் சட்டங்கள் ஏதும் இல்லை - 2 காவல்துறையில்லை கண்டிப்பும் இல்லை மனிதனின் ஆட்சியில்லை - பேரானந்தமே 6. கடைத்தெரு ஏதும் இல்லை தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை - 2 தரித்திரர் செல்வர் சிறியவர் பெரியோர் ஆகிய சிறப்பும் இல்லை - எல்லாம் சமம் 7. இயேசுவின் இரத்ததினால் பாவம் கழுவினால் செல்லலாமே - 2 இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர் இப்பூமியில் எவரும் வேண்டாம் இன்றே வாரீர்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm C G
D D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G
G D G
C G
Bm Em Am G
G D7 G