பாடல் #6308
இயேசு என் அஸ்திபாரம்
🔤 Yesu En Asthipaaram
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: C Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரே - நேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன் யானும்! 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும், - அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில்! 3. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவை என்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 4. லோகம் என்னை எதிர்த்து போவென்று சொல்லிடினும் - சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க? 5. என்னென்ன மாய லோகக் கன்னல் என்மேல் வந்தாலும் - முன்னும் பின்னுமாய் இயேசு என்னை நடத்திடுவார் 6. வியாதியால் எந்தனது காயம் கெட்டுப் போயினும் - மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesu En Asthipaaram Aasai Enakkavarae - Naesa Musippaarudhal Yesuvil Kantaen Yaanum! 2. Panjjam Pasiyudanae Minjsum Thuyar Vanthaalum, - Anjsitaen Ivaiyai En Thanjjam Yesu Irukkaiyil! 3. Enna Mathuram Avar Nannaya Naamach Suvai Ennakatthil Ninaitthaal Innal Paranthitumae 4. Logam Ennai Ethirtthu Povenru Sollitinum - Sogam Ataivaeno? En Aegan Enakkirukka? 5. Ennenna Maaya Logak Kannal Enmael Vanthaalum - Munnum Pinnumaay Yesu Ennai Natatthituvaar 6. Viyaathiyaal Endhanathu Kaayam Kettup Poyinum - Maayatthortratthai Yesu Naayakan Maarrituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C Em Am F G C G F G C C Em Am C C G F G C C Em Am Am C G F G C C Em Am C C G F G C C Em Am Am C G F G C C Em Am C C G F G C