பாடல் #6187
வேலைக்காரன் கண்கள்
🔤 Vaelaikkaaran Kankal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேலைக்காரன் கண்கள் தன் எஜமான் கரம் நோக்கும் தேவா எனக்காய் எல்லாம் செய்யும் உம் கரத்தை என்றும் நோக்குவேன் நீதியின் வலது கரம் நீதிமானை என்றும் தாங்கிடுமே விழுகையில் வியாதியின் நேரங்களில் விழுகையில் வியாதியின் நேரங்களில் வழுவாது உம் கரம் தாங்கிடுமே கடலும் ஆறும் தடையில்லை ஆண்டவர் கரம் என்னோடிருந்தால் தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் ஜெய வீரனாய் நானும் உம் பின் வருவேன் சத்துவமுள்ள உந்தன் கரம் நித்தம் காத்து வழி நடத்திடுமே உம் கரம் பற்றியே என்றுமே நான் உம் கரம் பற்றியே என்றுமே நான் பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே ஆதி அந்தம் இல்லாதோரே ஆவி ஆத்மா தேகம் உம் சொந்தமே முதிர் வயதால் தள்ளாடும் நேரங்களில் முதிர் வயதால் தள்ளாடும் நேரங்களில் முற்று முடிய தாங்கும் தம் கரம் என்றும். பாதகரும் சுத்தமாவார் உம் இரத்தம் வசனம் கொண்டென்றுமே சத்துருக்களை பாதத்தின் கீழ் தாழ்த்தியே சத்துருக்களை பாதத்தின் கீழ் தாழ்த்தியே மாசற்றோனாய் நிறுத்தம் அன்பின் கரம். அக்கினி தழலும் தென்றலாகும் தேவா உம்மோடு நடக்கும் போது சீறும் புயலால் ஆடும் படகுமே சீறும் புயலால் ஆடும் படகுமே சீராக ஓடும் தேவா உம் வார்த்தையாலே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaelaikkaaran Kankal Than Ejamaan Karam Nokkum Thaevaa Enakkaay Ellaam Seyyum Um Karatthai Enrum Nokkuvaen Neethiyin Valathu Karam Neethimaanai Enrum Thaangkitumae Vizhukaiyil Viyaathiyin Naeranggalil Vizhukaiyil Viyaathiyin Naeranggalil Vazhuvaathu Um Karam Thaangkitumae Katalum Aarum Thataiyillai Aandavar Karam Ennotirunthaal Thataigalai Agarrum Neer Munnae Senraal Thataigalai Agarrum Neer Munnae Senraal Jeya Veeranaay Naanum Um Pin Varuvaen Satthuvamulla Undhan Karam Nittham Kaatthu Vazhi Natatthitumae Um Karam Parriyae Enrumae Naan Um Karam Parriyae Enrumae Naan Patthiramaay Ippoovil Natappaenae Aathi Andham Illaathorae Aavi Aathmaa Thaegam Um Sondhamae Muthir Vayathaal Thallaatum Naeranggalil Muthir Vayathaal Thallaatum Naeranggalil Murru Mutiya Thaangkum Tham Karam Enrum. Paadhakarum Sutthamaavaar Um Rattham Vasanam Kontenrumae Satthurukkalai Paadhatthin Keezh Thaazhtthiyae Satthurukkalai Paadhatthin Keezh Thaazhtthiyae Maasarronaay Niruttham Anpin Karam. Akkini Thazhalum Thendralaakum Thaevaa Ummotu Natakkum Pothu Seerum Puyalaal Aatum Patakumae Seerum Puyalaal Aatum Patakumae Seeraaga Otum Thaevaa Um Vaartthaiyaalae.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm C Gm Bb C C Gm Bb C C F F Am Bb Am Gm C F F Am Bb C Dm F Gm C Dm C Gm C F F Am Bb Am Gm C F F Am Bb C Dm F Gm C Dm C Gm C F F Am Bb Am Gm C F F Am Bb C Dm F Gm C Dm C Gm C F