பாடல் #6173
விளைந்த பலனை அறுப்பாரில்லை
🔤 Vilaindha Palanai Aruppaarillai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விளைந்த பலனை அறுப்பாரில்லை விளைவின் நற்பலன் வாடிடுதே அறுவடை மிகுதி ஆளோ இல்லை அந்தோ! மனிதர் அழிகின்றாரே 1. அவர் போல் பேசிட நாவு இல்லை அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை எண்ணிலடங்கா மாந்தர் சத்தம் உந்தன் செவியினில் தொனிக்கலையோ 2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர் ஆயிரமாயிரம் அழிகின்றாரே திறப்பின் வாசலில் நிற்பவர் யார் தினமும் அவர் குரல் கேட்கலையோ 3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய் ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய் விரைந்து சென்று சேவை செய்வாய் விளைவின் பலனை அறுத்திடுவாய் 4. ஒருமனம் ஒற்றுமை ஏகசிந்தை சபைதனில் விளங்கிட செயல்படுவாய் நிமிர்ந்து நிற்கும் தூண்களைப்போல் நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய் 5. ஆவியின் வரங்கள் ஒன்பதனை ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய் சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய் சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் 6. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய் உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய் கர்த்தர் நாட்டின தோட்டத்திலே கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vilaindha Palanai Aruppaarillai Vilaivin Narpalan Vaatituthae Aruvatai Mikuthi Aalo Illai Antho! Manidhar Azhikinraarae 1. Avar Pol Paesida Naavu Illai Avar Pol Alainthida Kaalkal Illai Ennilatangkaa Maandhar Sattham Undhan Seviyinil Thonikkalaiyo 2. Aatthuma Iratsanyam Ataiyaadhavar Aayiramaayiram Azhikinraarae Thirappin Vaasalil Nirpavar Yaar Thinamum Avar Kural Kaetkalaiyo 3. Aatthuma Tharisanam Kantituvaay Aandavar Vaakkinai Aerrituvaay Virainthu Senru Saevai Seyvaay Vilaivin Palanai Arutthituvaay 4. Orumanam Orrumai Aegasinthai Sapaidhanil Vilangkida Seyalpatuvaay Nimirnthu Nirkum Thoonkalaippol Nilaivaramaay Enrum Thaangki Nirpaay 5. Aaviyin Varanggal Onbathanai Aavaludan Neeyum Perrituvaay Sapaiyin Nanmaikkaay Ubayokippaay Sandhatham Sapaiyinil Nilaitthiruppaay 6. Devanin Saevaiyil Poruppetuppaay Undhanin Pangkinai Aerrituvaay Kartthar Naattina Thottatthilae Kataisivarai Neeyum Kani Kotuppaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em G D C Em B Em Em D Am Em Em D C B Em Em D Am Em Em D C B Em Em D Am Em Em D C B Em Em D Am Em Em D C B Em Em D Am Em Em D C B Em