பாடல் #6089
வர வேணும் என தரசே
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
Scale: C Major
Beat: 2/4
🎸 Chords Available
வர வேணும், என தரசே, மனுவேல், இஸரேல் சிரசே. அருணோ தயம் ஒளிர் பிரகாசா, அசரீரி ஒரே சரு வேசா! - வர 1. வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா, உன் தாபரம் நல்குவாயே 2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் 3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ஞானாகரமே, நடு நிலை யோவா நண்பா, உனத நன்மையின் மகா தேவா! 4. வேதநாயகன் பாட்டிலே மேசியாவொரு காட்டிலே யூதேயாவெனும் நாட்டிலே யூகமாய் விடை வீட்டிலே நாதனாயெழும் நம் பெருமானே நம்பினர் தொழு சரணந் தருகோனே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C C G C C Am G F C G C C C G C C G C C G C C C G C C G C C G C