பாடல் #6087
வனாந்திரம் வயல்வெளியாகும்
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
Scale: E Major
Beat: 6/8
🎸 Chords Available
வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே வயல்வெளி காடாக எண்ணப்படுமே பின்மாரிக்யில் ஆறுகளும் பாய்ந்தோடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும் காடுவெளி களித்து செழிக்கும் லீபனோனின் மகிமை வருமே கர்மேல் சாரோன் அழகு பெறுமே தளர்ந்த கைகளை திடப்படுத்தி தள்ளாடும் கால்களை பெலப்படுத்தி திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம் பதில் அளிக்க தேவன் வருவார் குருடர்களின் கண்கள் காணுமே செவிடர்களின் செவிகள் கேட்குமே முடவன் மானைப் போல துள்ளுவான் ஊமையன் நாவும் பாடுமே மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே ஆசீர்வாத மழை பொழியுமே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m F#m A
B E G#m E
C#m E A
E F#m B E
E C#m E
G#m A
F#m A B
E A B E
E C#m E
G#m A
F#m A B
E A B E
E C#m E
G#m A
F#m A B
E A B E
E C#m E
G#m A
F#m A B
E A B E