பாடல் #6063
ராச ராச பிதா மைந்த
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
Scale: E Major
Beat: 6/8
🎸 Chords Available
ராச ராச (இராஜராஜ) பிதா மைந்த தேசுலாவு சதாநந்த யேசு நாயகனார் சொந்த மேசியானந்தனே! ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் - மகராஜ 1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ர நேசமே பணியே தந்திர மோசமே தணியே நிறையான காந்தனே! இறையான சாந்தனே! மறை 2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே பத ஆமனாமனா சுதனாமனாமனா சித 3.மேன்மையா சனனே நன்மை மேவுபோசனனே, தொன்மை பான்மை வாசனனே புன்மை பாவ மோசனனே கிருபா கரா நரா! சருவேசுரா, பரா திரு 4.வீடுதேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர் கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே நரவேட மேவினான் சுரராடு கோவினான் பர 5. ஆதிகா ரணனே சத்திய வேதபூரணனே நித்திய போத தாரணனே துத்திய கீதவாரணனே மரி யாவை தோத்திரனே ஸ்திரியேவை கோத்திரனே. 6. பாவிக்காசலையே சூட்சி பரம வாசலையே காட்சி நாவினீ நிலையே மாட்சி சீவ வானலையே திரு ஞானசீலனே பெரு மானுவேலனே குரு 7. விஞ்சையார் திருமான் பின்னு மஞ்சுசார் பெரு மானுன்னு நெஞ்சமாய் வருவான் மன்னு தஞ்சமே தருவான் கவி வேதநாயகன் சீவமோது தாயகன் திவிய. ஜெகதீசுரேசுரன் சுகநேசமீசுரன்--- மகராஜ சரிகக்க கரிகமா கமக ரிரிரீசரிகா சசாரி கக்க கரிகமா கப்பகாச ரீனிசா கம பாப்ப தனிதபா கமபாப்ப சனிதபா இராஜராஜ பிதா மைந்த தேசுலாவு சதானந்த யேசு நாயகனார் சொந்த மேசியானந்தனே.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A E
E A B E
E G#m E
E A
E
E A
B E
E G#m
E E
E A
E
E A
B E
E G#m
E
E A
E
E A
B E
E G#m
E
E A
E
E A
B E
E G#m
E