பாடல் #606
இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
🔤 Igamanuthaevaa Namaskarippaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இகமனுதேவா நமஸ்கரிப்பேன் இயேசு தயாளா சரணடைந்தேன் 1. மாசணுகாத திரு உருவே மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே தீமைக் கண்டேன் என் இதயத்திலே தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே குருபர நாதா தேடி வந்தீர் குறை நீக்க மனுவாய் அவதரித்தீர் 2. ஞானியர் போற்றிய தூயவனே மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன் ஆனந்தமாய் நின் பணிபுரிவேன் அகிலமே உமது அடிதொடர ஆணை பெற்றேன் நான் முன் நடக்க 3. காலத்தால் அழிந்திடா காவலனே கன்னியின் மைந்தனாய் வந்தவனே மாமன்னனாய் வருவீரே முகமுகமாய் காண்பேனோ திரிமுதல் தேவா காப்பீரே தினம் எமை கழுவி மீட்பீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Igamanuthaevaa Namaskarippaen Yesu Thayaalaa Saranatainthaen 1. Maasanukaadha Thiru Uruvae Makimaiyaith Thurandha Embaram Porulae Theemaik Kantaen En Idhayatthilae Thaazh Paninthaen Um Paadhatthilae Kurubara Naathaa Thaeti Vantheer Kurai Neekka Manuvaay Avatharittheer 2. Njaaniyar Porriya Thooyavanae Maeypparkal Vanangkina Maraiyavanae Aarpparitthu Um Pugazh Uraippaen Aanandhamaay Nin Panipurivaen Akilamae Umathu Atithodara Aanai Perraen Naan Mun Natakka 3. Kaalatthaal Azhinthitaa Kaavalanae Kanniyin Maindhanaay Vandhavanae Maamannanaay Varuveerae Mugamugamaay Kaanpaeno Thirimudhal Thaevaa Kaappeerae Thinam Emai Kazhuvi Meetpeerae