பாடல் #6041
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: G Major
Beat: 3/4
🎸 Chords Available
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உன் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணாண வாழ்க்கை வெறுத்தேனையா உலகத்தின் செல்வம் நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை பதில் என்ன சொல்வேன் நீரே போதும் சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும் பேரின்ப நாதா நீர் போதாதா யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ எங்கே நான் போவேன் உம்மையல்லால் உம்மோடல்லாது வாழ்வது ஏன் உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன் மனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல வாழ்வேனே என்றும் உமக்காக நான் என்னை தள்ளினால் நான் எங்கே போவேன் அடைக்கலம் ஏது உம்மையல்லால் கல்வாரி இன்றி கதியில்லையே கர்த்தர் நின் பாதம் சரனடைந்தேன் உற்றாரின் பாசம் உடன் வருமோ மற்றோரின் நேசம் மாறாததோ உம் அன்பின் நேசத்திற்கிணையாகுமே ஏனையா கேட்டீர் இக் கேள்வியை
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em C Am D G C G Am D G G Em C Am D G C G Am D G G Em C Am D G C G Am D G G Em C Am D G C G Am D G G Em C Am D G C G Am D G G Em C Am D G C G Am D G