பாடல் #603
ஆவியோடும் நான் கருத்தோடும்
🎙 கிறிஸ்தவ பாடல்
ஆவியோடுமே நான் கருத்தோடும் பாடிடுவேன் எந்தன் ஜீவனத்தில் உம்மைப் போல ஒரு தெய்வம் கண்டதில்லை இயேசுவே தேவாதி தேவன் ஜயா-உம்மை நெஞ்சுருகிப் பாடுகிறேன் வானாதி வானத்திலும்-உயர்ந்து உம் வல்லமைதான் விளங்குதே நீதியுள்ள தேவன் உமது-நாமத்தை போற்றுகின்றேன் இயேசுவே சாதி மத பேதமில்லா-உமது சன்னிதி தான் ஆனந்தமே என்னிதயம் பொங்குதையா-உமது ஜீவனுள்ள வார்த்தையினால் கண்ணெடுத்துப் பாருமையா- உமக்காய் பண்ணமைத்துப் பாடிடுவேன்