பாடல் #593
ஆவியே இறங்கும் இப்போது உந்தன்
🔤 Aaviyae Irangkum Ippothu Undhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியே! இறங்கும் இப்போது - உந்தன் ஆசீர்வாதந் தர - அடியார்கள் மீது. ஜீவாவியே! உமது திருவருளாலே தெளிந்து ஞானஸ்நானம் பெற்றவர் மேலே. - ஆவியே 1. அன்று யோர்தான் நதியதிலே - யேசு அமலன் முழகி ஸ்நானம் பெற்ற போதினிலே வந்தீர் புறா வடிவாய் வானந் திறக்கப்பட்டு அந்த விதமிவர்க்கும் அருளவ்வன்புற்று. - ஆவியே 2. பெந்தெகொஸ்தே நாளில் உமது சீஷர் பேரில் வந்திறங்கியே வரங்களைத் தந்தீர் சிந்தை மகிழ்ந்திட சிரமீதமர்ந்து மெய் ஞானஸ்நானத்தில் வழி நடத்தினீர். - ஆவியே 3. தேடும் வரங்களைத் தாரும் வேத ப்ரமாணத்தைக் கைக்கொள்ளச் செய்யும் நல் ஞானஸ்நானத்தை நாடிப் பெற்ற இவர் நன் மனச்சாட்சியில் நடந்திடத் தினமும். - ஆவியே 4. சத்தியம் யாவிலும் நடத்தும் - திவ்ய சத்திய ஆவியே! இவர்களைத் தேற்றும் இரவு பகலவர் பக்கத்தில் இருந்து பாதுகாத்தாண்டு நீர் - பண்புடன் உவந்து. - ஆவியே 5. தேற்றரவாளன் நீர்தாமே - உந்தன் திருவருளால் எல்லாத் தீமையும் போமே மாற்றமில்லா சத்ய தேவனே இன்றும் மக்களுக் கிரங்கியே வந்தருள் என்றும். - ஆவியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyae! Irangkum Ippothu - Undhan Aaseervaadhan Thara - Atiyaarkal Meethu. Jeevaaviyae! Umathu Thiruvarulaalae Thelinthu Njaanasnaanam Pertravar Maelae. - Aaviyae 1. Anru Yorthaan Nathiyathilae - Yaesu Amalan Muzhaki Snaanam Pertra Pothinilae Vantheer Puraa Vativaay Vaanan Thirakkappattu Andha Vidhamivarkkum Arulavvanpurru. - Aaviyae 2. Penthekosthae Naalil Umathu Seeshar Paeril Vanthirangkiyae Varanggalaith Thantheer Sinthai Makizhnthida Sirameedhamarnthu Mey Njaanasnaanatthil Vazhi Natatthineer. - Aaviyae 3. Thaetum Varanggalaith Thaarum Vaedha Pramaanatthaik Kaikkollach Seyyum Nal Njaanasnaanatthai Naatip Pertra Ivar Nan Manachsaatsiyil Natanthidath Thinamum. - Aaviyae 4. Satthiyam Yaavilum Natatthum - Thivya Satthiya Aaviyae! Ivarkalaith Thaerrum Iravu Pakalavar Pakkatthil Irunthu Paathukaatthaantu Neer - Panpudan Uvanthu. - Aaviyae 5. Thaertraravaalan Neerthaamae - Undhan Thiruvarulaal Ellaath Theemaiyum Pomae Maartramillaa Sathya Devanae Inrum Makkaluk Kirangkiyae Vandharul Enrum. - Aaviyae