பாடல் #5912
போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்
🔤 Paeாrrum Paeாrrum Punniya Naadharaip Paeாrrum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும்! வானோர் கூடிப் பாடவும் இன்பமாய், பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய மாந்தர் யாரும் வாரும், ஆனந்தமாய்; நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு யேசு நாதர் நம்மையும் தாங்குவார். போற்றும், போற்றும்! தேவகுமரனைப் போற்றும் ! பாதுகாத்து நித்தமும் போஷிப்பார். போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்! பாவம் போக்க பாரினில் ஜென்மித்தார்; பாடு பட்டு ப்ராணத்தியாகமுமாகி வான லோக வாசலைத் திறந்தார்; மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்! வாழ்க வாழ்க ஜெகத்து ரட்சகா! அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி! வல்ல தேவா, கருணை நாயகா! போற்றும்! போற்றும்! புண்ணிய நாதரப் போற்றும்! விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும், போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக ஆட்சி செய்வார் நித்திய காலமும்; ஏக ராஜா மாட்சிமையோடே வந்து யேசு ஸ்வாமி பூமியில் ஆளுமேன்; லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி ஜொதியாகப் பாலனம் பண்ணுமேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paeாrrum Paeாrrum Punniya Naadharaip Paeாrrum! Vaanaeாr Kootip Paadavum Inbamaay, Paarilaeyum Naama Sangkeertthanam Seyya Maandhar Yaarum Vaarum, Aanandhamaay; Naesa Maeyppan Karatthil Aenthumaaru Yaesu Naadhar Nammaiyum Thaangkuvaar. Paeாrrum, Paeாrrum! Thaevakumaranaip Paeாrrum ! Paathukaatthu Nitthamum Paeாshippaar. Paeாrrum, Paeாrrum! Punniya Naadharaip Paeாrrum! Paavam Paeாkka Paarinil Jenmitthaar; Paatu Pattu Praanatthiyaagamumaaki Vaana Laeாga Vaasalaith Thiranthaar; Maa Kartthaavae, Sthaeாtthiram Enrum Enrum! Vaazhka Vaazhka Jegatthu Ratsakaa! Arul Naathaa, Maasanukaa Paranjsaeாthi! Valla Thaevaa, Karunai Naayakaa! Paeாrrum! Paeாrrum! Punniya Naadharap Paeாrrum! Vinnum Mannum Isainthu Paadavum, Paeாrrum, Paeாrrum, Meetpar Makatthuvamaaga Aatsi Seyvaar Nitthiya Kaalamum; Aega Raajaa Maatsimaiyaeாtae Vanthu Yaesu Svaami Poomiyil Aalumaen; Laeாgam Engkum Neethiyin Sengkaeாlai Ochsi Jeாthiyaagap Paalanam Pannumaen.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C
G
A D
G Am G
G Em D G
D G D
G Em A D
G
C G
C D G
G
C G
A D
G C G
G Em D G
D G
G Em A D
G C G
C D G
G
C G
A D
G Am G
G Em D G
D G D
G Em A D
G C G
C D G