பாடல் #5848
பாரீர் கெத்சமனே
🔤 Paareer Kethsamanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே பாவியெனக்காய் வேண்டுதல் செய்திடும் சத்தம் தொனித்திடுதே தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய் தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால் எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால் முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர் துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paareer Kethsamanae Poongkaavilen Naesaraiyae Paaviyenakkaay Vaentudhal Seythitum Sattham Thonitthituthae Thaegamellaam Varunthi Sogamataindhavaraay Thaevaathi Devan Aega Sudhan Patum Paatugal Enakkaayae Appaa Ippaatthiramae Neekkum Nin Sitthamaanaal Eppatiyumum Sittham Seyya Ennaith Thattham Seythaen Enraarae Ratthatthin Vaervaiyaalae Metthavumae Nanainthae Immaanuvaelan Ullamurukiyae Vaentudhal Seythanarae Mummurai Tharai Meethae Thaangkonnaa Vaedhanaiyaal Munnavan Thaamae Veezhnthu Jepitthaarae Paadhakar Meetpuravae Anpin Arul Mozhiyaal Aarudhal Alippavar Thunba Vaelaiyil Thaerruvaarinriyae Nonthu Alarukinraar Ennaiyum Thammaip Pola Maarrum Immaa Naesatthai Enni Yenniyae Ullam Kaninthu Naan Enrum Pugazhnthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G B Em D G G G7 C D Am D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G G Am G D G G C G D G