பாடல் #5789
பயப்படாதே பாரிலிப்போதே
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: D Major
Beat: 2/4
🎸 Chords Available
பயப்படாதே பாரிலிப்போதே திகையாதே கலங்காதே தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன் அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் 1.தண்ணீரை நீ கடக்கும் போது உன்னோடு கூட நானிருப்பேன் ஆறுகளை நீ கடக்கும் போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 2.அக்கினியில் நீ நடக்கும் போது அஞ்ச வேண்டாம் வேகாதிருப்பாய் அக்கினி ஜீவாலை உன்னைப்பற்றாது விக்கினங்கள் ஏதும் சுற்றாது ! 3.இஸ்ரவேலின் பரிசுத்தர் நானே இரட்சகராம் தேவனும் நானே உன்னை மீட்க நான் வந்தேனே கண்மணி போல் அருமையானவனே – பயப்படாதே 4. உன்னை நானே உருவாக்கினேனே அன்னை போலவும் ஆதரிப்பேனே கண்மூடாமலும் காத்திடுவேனே சொன்னதை நிறைவேற்றிடுவேனே – பயப்படாதே 5.முந்தினதை நினைக்க வேண்டாம் பூர்வமானத்தை சிந்திக்க வேண்டாம் எந்த துன்பத்தில் சோர்ந்திட வேண்டாம் வாக்குகளையும் விட்டிட வேண்டாம் – பயப்படாதே 6. ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே என்றும் ஜெபத்தையும் தவறவிடாதே கடந்த தோல்வியை எண்ணி விடாதே நடந்திடும் வழிகளையும் விடாதே – பயப்படாதே 7.அல்லேலூ யாவுக் கருகனே அல்லும் பகலும் ஆதரிப்பேனே அல்பா ஒமெகா நான் தானே வல்ல கரத்தால் நடத்துவேனே!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em A F#m G A D D G Bm Em A Em D D A Bm E A D Bm F#m G E A D D A Bm E A D Bm F#m G E A D D A Bm E A D Bm F#m G E A D D A Bm E A D Bm F#m G E A D