பாடல் #5774
பசுமையான புல்வெளியில்
🔤 Pasumaiyaana Pulveliyil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 105 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2) நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா - (2) 1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் - (2) 2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல - (2) 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே - (2) 4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர் மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் - (2) 5. எனது உள்ளம் அபிஷேகத்தால் நிரப்பி வழியுதே எல்லா நாளும் நன்றிப் பாடல் பாடி மகிழுதே -(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pasumaiyaana Pul Veliyil Patukka Vaippavarae Amaithiyaana Thanneerantai Azhaitthuch Selpavarae (2) Noy Illaadha Suga Vaazhvu Enakkuth Thandhavarae Karam Pititthu Katan Illaathu Natatthich Selpavarae En Maeypparae Nal Aayanae Enakkonrum Kuraiyillappaa - (2) 1. Puthiya Uyir Thinam Thinam Enakkuth Tharukireer Um Peyarirkaerpa Parisutthamaay Natatthich Selkireer - (2) 2. Marana Irul Pallatthaakkil Natakka Naernthaalum Appaa Neengga Iruppathaal Enakkup Payamilla - (2) 3. Jeevanulla Naatkalellaam Nanmai Thodarumae Endevan Veettil Thinam Thinam Thangki Makizhvaenae - (2) 4. Karanggalaalae Anaitthuk Kontu Sumanthu Selkireer Maranthitaamal Unavu Kotutthu Pelan Tharukireer - (2) 5. Enathu Ullam Apishaegatthaal Nirappi Vazhiyuthae Ellaa Naalum Nanrip Paadal Paati Makizhuthae -(2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
A
A7 D
A
A7 D
A G
D A7 D
D
G
A D
D
G
A D
D
G
A D