பாடல் #5677
நான் பாவி தான் ஆனாலும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
Scale: D Major
Beat: 3/4
🎸 Chords Available
நான் பாவி தான் ஆனாலும் நீர் மாசற்ற இரத்தம் சிந்தினீர் வா என்று என்னை அழைத்தீர் என் மீட்பரே வந்தேன் – வந்தேன் நான் பாவி தான் என் நெஞ்சிலே கறைபிடித்திருக்குதே என் கறை நீங்க இப்போதே என் மீட்பரே வந்தேன் – வந்தேன் நான் பாவி தான் – பயத்தினால் அலைந்து பாவப்பாரத்தால் அமிழ்ந்து மாண்டு போவதால் என் மீட்பரே வந்தேன் – வந்தேன் நான் பாவி தான் – மெய்யாயினும் சீர் நேர்மை செல்வம் மோட்சமும் உம்மாலே பெற்று வாழவும் என் மீட்பரே வந்தேன் – வந்தேன் நான் பாவி தான் இரங்குவீர் அணைத்துக் காத்து இரட்சிப்பீர் அருளாம் செல்வம் அளிப்பீர் என் மீட்பரே வந்தேன் – வந்தேன் நான் பாவி தான் – அன்பாக நீர் நீங்காத் தடைகள் நீக்கினீர் உமக்குச் சொந்தம் ஆக்கினீர் என் மீட்பரே வந்தேன் – வந்தேன்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D D A D D G A D D Bm F#m G A Bm Em A D