பாடல் #5620
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ
🔤 Aagamanggal Pugazh Vaethaa Namo Namo
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ வாகு தங்கு குருனாதா நமோ நமோ ஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ - அருரூபா மாகமண்டல விலாசா நமோ நமோ மேகபந்தியி னுலாசா நமோ நமோ வான சங்கம் விஸ்வாசா நமோ நமோ - மனுவேலா நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோ காகமும் பணிசெய் சீலா நமோ நமோ நாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ - நரதேவா ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோ யூக தந்த்ரவாதி சீமா நமோ நமோ ஏசு வென்ற திருநாமா நமோ நமோ - இறையோனே அறிவி னுருவாகிய மூலா நமோ நமோ மறையவர்கள் தேடிய நூலா நமோ நமோ அதிசய பராப சீலா நமோ நமோ - அருளாளா பொறிவினை யூறத சரீரா நமோ நமோ குறையணுவிலாத குமாரா நமோ நமோ புவன முழுதாள் அதிகாரா நமோ நமோ - புதுவேதா நிறைவழியின் மேவிய கோனே நமோ நமோ முறைகள் தவறாத விணேனே நமோ நமோ நிதிபெருகு மாரச தேனே நமோ நமோ - நெறிநீதா இறை தவிது பாடிய கீதா நமோ நமோ பறைகள்பல கூடிய போதா நமோ நமோ எருசலை யினீடிய நாதா நமோ நமோ - இறையோனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aagamanggal Pugazh Vaethaa Namo Namo Vaaku Thangku Kurunaathaa Namo Namo Aayar Vandhanaisey Paathaa Namo Namo - Aruroopaa Maagamandala Vilaasaa Namo Namo Maegapanthiyi Nulaasaa Namo Namo Vaana Sanggam Visvaasaa Namo Namo - Manuvaelaa Naagavimbam Uyar Kolaa Namo Namo Kaagamum Panisey Seelaa Namo Namo Naatum Anbar Anukoolaa Namo Namo - Narathaevaa Aesu Manthramuru Poomaa Namo Namo Yooga Thanthravaathi Seemaa Namo Namo Aesu Vendra Thirunaamaa Namo Namo - Iraiyonae Arivi Nuruvaakiya Moolaa Namo Namo Maraiyavarkal Thaetiya Noolaa Namo Namo Athisaya Paraaba Seelaa Namo Namo - Arulaalaa Porivinai Yooratha Sareeraa Namo Namo Kuraiyanuvilaadha Kumaaraa Namo Namo Puvana Muzhuthaal Athikaaraa Namo Namo - Puthuvaethaa Niraivazhiyin Maeviya Konae Namo Namo Muraigal Thavaraadha Vinaenae Namo Namo Nithiperuku Maarasa Thaenae Namo Namo - Nerineethaa Irai Thavithu Paatiya Keethaa Namo Namo Paraigalpala Kootiya Pothaa Namo Namo Erusalai Yineetiya Naathaa Namo Namo - Iraiyonae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C F F Dm Dm A# F F F C F F F A# F F F C F F F A# F F F C F F F A# F F F C F F F A# F