பாடல் #5609
ஆ வாரும் நாமெல்லாரும் கூடி
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: G Major
Beat: 3/4
🎸 Chords Available
ஆ வாரும் நாமெல்லாரும் கூடி மகிழ் கொண்டாடுவோம்-சற்றும் மாசிலா நம் இயேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம் தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார்- இந்த தாரணியிலே மனுடவ தாரம் ஆயினார்---ஆஆ. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம்-அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்--ஆஆ. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர்-பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்--ஆஆ. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த மண்டலத்தினின்(று) உயிர்த்தவர் விண்டலகு சென்றார்--ஆஆ. பாவிகட்காய் பரனிடம் பரிந்து வேண்டியே-அவர் பட்சம் வைத்துறம் தொழும் பரை ரட்சை செய்கிறார்--ஆஆ.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D G
C D G
G Bm Em
A D7 G
G D G C
D G Bm
Em A D7 G
G D G C
D G
Bm Em A D7 G
G D G C
D G
Bm Em A D7 G
G D G C
D G Bm
Em A D7 G
G D G C
D G Bm
Em A D7 G