பாடல் #560
ஆலயம் போய்த்தொழ
🔤 Aalayam Poytthozha
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலயம் போய்த்தொழ வாருமென்ற தொனி ஆனந்தப் பரவசம் அருளுதாத்துமந்தனில் ஆலயந்தொழுவது சாலவும் நன்றென ஆன்றோருரை நெறி சான்ற வாக்கானதே ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும் பரன் – ஆலயம் 1. பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள் பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும் முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன் மாட்சி காணவே 2. பூர்வமுதல் தொழும்பர் போந்தாலயந் தொழுதார் புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார் ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார் ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார் ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி 3. தனித்தியானத்துடன் சமுசார ஜெபம் நன்று சபையாரோடர்ச்சனை தருதல் மிகவும் நன்று இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து இலங்கு சுடர்கள் போல உலகுக்கொளியே தந்து எந்தையார் சுதன் சிந்தையில் வளர்ந்தென்றும் அன்பதில் ஒன்றவே திரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalayam Poytthozha Vaarumendra Thoni Aanandhap Paravasam Aruluthaatthumandhanil Aalayanthozhuvathu Saalavum Nanrena Aanrorurai Neri Saandra Vaakkaanathae Aavalaayathi Kaalaiyum Pakal Maalaiyun Thirunaalilum Paran – Aalayam 1. Parama Sannathiyenrum Parisuttha Thoodharkal Paninthu Pugazhnthu Keedham Paatiyanjjali Seyyum Muraiyothun Thirumarai Karamaenthi Thakshanai Muzhumanathotu Kontu Ulam Idhazh Thuthivintu Motsa Maanakar Kaatsiyaal Iga Saatsiyaam Paran Maatsi Kaanavae 2. Poorvamudhal Thozhumbar Ponthaalayan Thozhuthaar Punidha Sudhanum Namakkinu Munmaathiri Thanthaar Aarvamulaaravarae Aaraarudanunj Senraar Aiyanin Makimaiyae Angkum Vilangga Ninraar Aadhalaalini Yaarilungkurai Yothitaathena Thullamae Ini 3. Thanitthiyaanatthudan Samusaara Jebam Nanru Sapaiyaarodarcchanai Tharudhal Migavum Nanru Inithae Satthiyavaedham Porularavae Unarnthu Ilangku Sudarkal Pola Ulakukkoliyae Thanthu Enthaiyaar Sudhan Sinthaiyil Valarnthenrum Anbathil Ondravae Thiru