பாடல் #558
ஆறுதல் அடை மனமே
🔤 Aarudhal Atai Manamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதல் அடை மனமே -கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடை மனமே பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின் கூரை அழித்த யேசு கொற்றவன்றனை நோக்கி நம்பிக்கை யற்றோரைப் போலே மரித்தோர்க்காக நலிவதேன் ஒருக்காலே உம்பர் கோன் மேகத்தின் மேலே - தோன்றிடும் போ துயிர்த்தெழும்புவ தாலே வெம்பிப் புலம்பி அழ வேண்டாம் கிறிஸ்து வெனும் தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து ஜீவ நதிகள் ஓடுமே - எருசலேமில் திரளாய் ஜனங்கள் கூடுமே தேவ துதியைப் பாடுமே - யேசுகிறிஸ்தின் ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக எண்ணம் கவலைகள் உண்டாம் மரித்தோர்க்காக ஏக்கம் பெருமூச்சும் உண்டாம் கண்ணீர் சொரிவதும் உண்டாம் -துயரம் மிஞ்சிக் கலங்கி அழுவதும் உண்டாம் அண்ணல் கிறிஸ்துவும் முன் எண்ணிக் கண்ணீர் விட்டார் நண்ணி அவரை ஜெபம் பண்ணித் துயரை விட்டு யேசுவைப் பற்றின பேர்கள் - மரித்தும் உயிர்த் தெழுந்து புறப்படுவார்கள் மாசற்ற தேவன் அவர்கள் - உடனிருக்க மகிமை பெற்றிருப்பார்கள் பேச வேண்டுமோ யேசு ராசன் சமுகமதில் நேசமுடன் என்றைக்கும் வாசம் செய்வார்கள் அல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhal Atai Manamae -kiristhuvukkul Aarudhal Atai Manamae Paarul Paavatthaal Vandha Palanaam Marana Mathin Koorai Azhittha Yaesu Kortravandranai Nokki Nampikkai Yarroraip Polae Maritthorkkaaga Nalivathaen Orukkaalae Umbar Kon Maegatthin Maelae - Thonritum Po Thuyirtthezhumpuva Thaalae Vempip Pulampi Azha Vaentaam Kiristhu Venum Thampiraan Thirumozhich Saaratthai Rusipaartthu Jeeva Nathigal Otumae - Erusalaemil Thiralaay Jananggal Kootumae Thaeva Thuthiyaip Paatumae - Yaesukiristhin Jeyatthaich Sollik Kontaatumae Aavaludanae Naamum Athaiyae Ataivatharku Jeeva Vasanan Thannaith Thidanaayp Pitippomaaga Ennam Kavalaigal Untaam Maritthorkkaaga Aekkam Perumoochsum Untaam Kanneer Sorivathum Untaam -thuyaram Minjsik Kalangki Azhuvathum Untaam Annal Kiristhuvum Mun Ennik Kanneer Vittaar Nanni Avarai Jebam Pannith Thuyarai Vittu Yaesuvaip Parrina Paerkal - Maritthum Uyirth Thezhunthu Purappatuvaarkal Maasartra Devan Avarkal - Udanirukka Makimai Perriruppaarkal Paesa Vaentumo Yaesu Raasan Samugamathil Naesamudan Enraikkum Vaasam Seyvaarkal Allo