பாடல் #545
ஆரிடத்தில் ஏகுவோம்
🔤 Aaridatthil Aekuvom
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆரிடத்தில் ஏகுவோம்? எம் ஆண்டவனே, ஆரிடத்தில் ஏகுவோம்? ஆரிடத்தில் ஏகுவோம்? சோராநித்திய ஜீவ நேரார் வசனங்கள் உம்சாரில் இருக்க, இனி - ஆரி 1.பாவிகளாம் எங்களுக்கு - உமையல்லாது தாபரமில்லை; நீரே ஜீவன் தனையுடைய தேவகுமாரனாக மேவு கிறிஸ்தென்றுமையே - ஆவலுடன் நம்பினோம் - ஆரி 2.போனவர்போல நாங்களும் - உமை நெகிழ்ந்து போவதில்லை, பரமனே ஞானோபதேச குருவான உம்மை அண்டின ஈனர் இனிதுற்ற உமது - தானமதைப் பிரிந்து - ஆரி 3.உற்றார் சிநேகர் யாரையும் - எம் வீடுவாசல் உள்ள பொருளனைத்தையும் முற்றாய் வெறுத் தும்மையே பற்றியிருக்க நாங்கள் தெற்றாய்? இனியும்மைநன்றி - யற்றோர்போலே நெகிழ்ந்து - ஆரி 4.பொன் னுலகத் திருந்தெம்மைப் - புரக்க வந்த புண்ய நாதன் நீரல்லவோ? பின்ன பேதகமற்ற மன்னவனே, உமது நன்னய முகப்பிர - சன்ன மதனை விட்டு. - ஆரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaridatthil Aekuvom? Em Aandavanae, Aaridatthil Aekuvom? Aaridatthil Aekuvom? Soraanitthiya Jeeva Naeraar Vasananggal Umsaaril Irukka, Ini - Aari 1.paavigalaam Enggalukku - Umaiyallaathu Thaabaramillai; Neerae Jeevan Thanaiyutaiya Thaevakumaaranaaga Maevu Kiristhenrumaiyae - Aavaludan Nampinom - Aari 2.ponavarpola Naanggalum - Umai Nekizhnthu Povathillai, Paramanae Njaanobathaesa Kuruvaana Ummai Antina Eenar Inithurtra Umathu - Thaanamathaip Pirinthu - Aari 3.urraar Sinaegar Yaaraiyum - Em Veetuvaasal Ulla Porulanaitthaiyum Murraay Veruth Thummaiyae Parriyirukka Naanggal Therraay? Iniyummainanri - Yarrorpolae Nekizhnthu - Aari 4.pon Nulakath Thirunthemmaip - Purakka Vandha Punya Naadhan Neerallavo? Pinna Paedhakamartra Mannavanae, Umathu Nannaya Mugappira - Sanna Mathanai Vittu. - Aari