பாடல் #542
ஆராய்ந்து பாரும்
🔤 Aaraaynthu Paarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராய்ந்து பாரும், கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் ஆராயும் என்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர்! என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர் ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும்; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் ஆராயும் சிந்தை, யோசனை, எவ்வகை நோக்கமும், அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும் ஆராயும் மறைவிடத்தை உம் தூயக் கண்ணினால்; அரோசிப்பேன் என் பாவத்தை உம பேரருளினால் இவ்வாறு நீர் ஆராய்கையில், சாஷ்டாங்கம் பண்ணுவேன்; உம் சரணார விந்தத்தில் பணிந்து போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaynthu Paarum, Karttharae En Seykai Yaavaiyum Neer Kaanumaaru Kaanavae Ennil Pirakaasiyum Aaraayum Enthan Ullatthai Neer Sothitthariveer! En Andharangga Paavatthai Maa Thelivaakkuveer Aaraayum Sudaroliyaal Thooraasai Thondravum; Mey Manasthaabam Adhanaal Untaakkiyarulum Aaraayum Sinthai, Yosanai, Evvakai Nokkamum, Asuttha Manopaavanai Ullinthiriyanggalum Aaraayum Maraividatthai Um Thooyak Kanninaal; Arosippaen En Paavatthai Uma Paerarulinaal Ivvaaru Neer Aaraaykaiyil, Saashtaanggam Pannuvaen; Um Saranaara Vindhatthil Paninthu Porruvaen