பாடல் #5344
ஜாதிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
Scale: G Major
Beat: 6/8
🎸 Chords Available
ஜாதியிலே ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி காஸ்டிலே காஸ்டு நாங்க ஹோலி காஸ்டு - 2 காஸ்டிலே காஸ்டு நீங்க என்ன காஸ்டு காஸ்டிலே காஸ்டு நாங்க பென்டிகாஸ்டு 1. யூதனென்றும் இல்லை கிரேக்கனென்றும் இல்லை உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை கிறிஸ்துவின் சமூகத்திலே ஆணென்றும் இல்லை பெண்னென்றும் இல்லை கற்றவனும் இல்லை கல்லாதவனும் இல்லை அனைவரும் சரிசமமே டெளரி வாங்கும் கிறிஸ்தவனுக்கு நீதி இல்லையே ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே தாளி கயுறு கட்டுகிற வேலை யில்லையே நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே ஜாதி டெளரி ஓழித்து கட்டி புரட்சி செய்வோமே பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே 2. புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு கல்யாணம் என்பது கனமுள்ளதாகும் சந்தையாக மாற்ற வேண்டாம் நியாயத்துக்கும் அநீதிக்கும் வெளிச்சத்துக்கும் இருளுக்கும் கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் ஆயத்துக்கும் திருடனுக்கும் சம்பந்தமில்லை தெரிஞ்சுக்கோங்க 3. நேரம் காலம் பார்த்து ராகு காலம் கேட்டு நல்ல நாளும் வைத்து சகுனமெல்லாம் பார்த்து கல்யாணத்தை நடத்தறாங்க கர்த்தருடன் இருக்கையிலே காலம் நேரம் ஒன்றுமில்லை காலம் நேரம் பார்ப்பதுமே கர்த்தருக்கே கோபமாமே புரிஞ்சிக்காம செய்யிறாங்க
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D
D7 G
G Am
D7 G
G G
Am
D7 D
D7 Am
D G
G c
D7 G
G C
D7 G
G C
D7 G