பாடல் #5279
சாலேமின் ராசா சங்கையின் ராசா
🔤 Saalaemin Raasaa Sangkaiyin Raasaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாலேமின் ராசா சங்கையின் ராசா சுவாமி வாருமேன் இந்த தாரணி மீதினில் ஆளுகை செய்திட சடுதி வாருமேன் 1. சீக்கிரம் வருவேன் என்றுரைத்து போன செல்வக் குமாரனே இந்த சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ 2. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்து கண் பூத்துப் போகுதே-நீர் சுட்டிக் காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறை வேறலாகுதே 3. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை நாடித் தேடுதே இந்த நானிலத்திலுள்ள ஜீவப் பிராணிகள் தேடி வாடுதே 4. சாட்சியாக சுபவிசேஷகம் தாரணி மேவுதே உந்தன் சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saalaemin Raasaa Sangkaiyin Raasaa Suvaami Vaarumaen Indha Thaarani Meethinil Aalukai Seythida Satuthi Vaarumaen 1. Seekkiram Varuvaen Enruraitthu Pona Selvak Kumaaranae Indha Seeyonin Maathugal Thaetith Thirikindra Seythi Kaeleero 2. Etti Etti Ummai Annaanthu Paartthu Kan Pootthup Pokuthae-neer Suttik Kaattippona Vaakkutthattham Nirai Vaeralaakuthae 3. Nangkai Erusalaem Pattinam Ummai Naatith Thaetuthae Indha Naanilatthilulla Jeevap Piraanigal Thaeti Vaatuthae 4. Saatsiyaaga Subavisaeshakam Thaarani Maevuthae Undhan Saatsigalutaiya Ratthanggalellaam Thaavik Koovuthae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
E G# C#m
E A
F#m B A E
E G#m C#m
E B E
A G#m
C#m B E
E G#m
C#m E B E
A G#m C#m B
E
E G#m
C#m E B E
A G#m
C#m B E
E G#m C#m
E B E
A G#m
C#m B E