பாடல் #5264
சரணம் சரணம் அனந்தா சச்சினாந்தா
🔤 Saranam Saranam Ananthaa Sachsinaanthaa
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா, தாவீதின் மைந்தா, ஓசன்னா சரணபதந்தா 1.தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே சென்று பல பாடுபடவும் தயவானார் 2.தந்து செய்து பொந்தியுப்பிலாத்து துரைதான் தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் 3.பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி, பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான் 4.ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று, திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் 5.தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே தற்பரனைக் கொல்வதற்கிங் கொப்புக்கொடுத்தான் 6.கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக, காவலனைக் குருசறையப் பாவியும் தீர்த்தான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saranam, Saranam, Ananthaa, Sachsithaananthaa, Thaaveethin Mainthaa, Osannaa Saranapathanthaa 1.thaevasudhan Ponthiyup Pilaatthinidamae Senru Pala Paatubatavum Thayavaanaar 2.thanthu Seythu Ponthiyuppilaatthu Thuraithaan Tharparanai Vittuvidath Thannul Enninaan 3.parapaaso Tathibathiyaip Paniya Nirutthi, Paadhakanai Yo? Iraiyai Yo? Vida, Enraan 4.jeevanuda Athibathiyaich Siluvaiyil Konru, Thirudanaiyae Vittuvidath Theeyavar Kaettaar 5.thanneer Thanai Etutthuk Kai Kazhuviyae Tharparanaik Kolvatharking Koppukkotutthaan 6.kallanaiyae Vittu Vittu Yoodharkatkaaga, Kaavalanaik Kurusaraiyap Paaviyum Theertthaan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E E B F#m A B E