பாடல் #5246
சத்திய வேதத்தைத் தினம் தியானி
🔤 Satthiya Vaedhatthaith Thinam Thiyaani
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி உத்தமஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும் --- சத்திய வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும் பாலகர்க்கினிய பாலும் அதாம் படிமீ தாத்மபசி தணிக்கும் --- சத்திய சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அதுநல் ஆயுதமாம் புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும் --- சத்திய புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம் நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் --- சத்திய கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது --- சத்திய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Satthiya Vaedhatthaith Thinam Thiyaani Sakala Paerkkum Adhapimaani Utthamajeeviya Vazhikaattum Uyarvaanulakil Unaikkoottum --- Satthiya Vaalibarthamakkoon Athuvaakum Vayothiyarkkum Athunavaakum Paalakarkkiniya Paalum Athaam Patimee Thaathmapasi Thanikkum --- Satthiya Satthurup Paeyudan Amarpuriyum Tharunam Athunal Aayudhamaam Putthirar Mitthirarotu Makizhum Pozhuthum Athunal Uravaakum --- Satthiya Pulaimaeviya Maanida Ridhayam Punidham Perudharkathumarunthaam Nilaiyaa Nararvaanaal Nilaikka Naeyakaaya Karpam Athaam --- Satthiya Kathiyin Vazhikaanaadhavarkal Kannukkariya Kalikkam Athu Puthiya Erusaalaembathikkup Pokum Payanatthunaiyum Athu --- Satthiya
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D D G D D Em A D F# Em A D A G D