பாடல் #5245
சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய
🔤 Satthaay Nishkalamaayoru Saamiya
🎙 Bro. ஹென்றி ஆல்ஃப்ரெட் கிருஷ்ணபிள்ளை • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மும்இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து அத்தா உன்னையல்லால் எனக்கார் துணையாருறவே? 2. எம்மா விக்குருகி உயிரீந்த புரத்ததற்கோர் கைம்மாறுண்டுகொலோ? கடைகாறுங்கையடைவாய், சும்மாரசணைசெய், சொல் சுந்தரம் யாதுமிலேன், அம்மான், உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 3. திரைசேர் வெம்பவமாம் கடல் முழ்கிய தீயரெமைக் கரசேர்ந்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான், பரசேன் பற்றுகிலேன், என்னைப் பற்றிய பற்றுவிட்டாய், அரசே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 4. தாயே, தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும் நீயே எம்பெருமான், கதிவேறிலை நிண்ணயங்காண். “ஏயே“ என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை? ஆயே, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 5. பித்தேறிச்சுழலும் ஜெகப் பேய்பிடித் துப்பவத்தே செத்தேன், உன்னருளால் பிழைத்தேன்மறு ஜென்மமதாய். எத்தோஷங்களையும் பொறுத்தென்றும் இரங்குகவென்று அத்தா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 6. துப்பார் சிந்தையிலேன் மறைந்தீட்டிய தொல்வினையும் தப்பாதேவெளி யாநடுநாளெனைத் தாங்கிக் கொள்ள, இப்பாருய்யவென்றே மனுக்கோலமெடுத்த எங்கள் அப்பா, உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே? 7.ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத் தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண் மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே? 8.மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள் நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Satthaay Nishkalamaay Orusaamiya Mumilathaay Sitthaay Aanandhamaayth Thigazhkindra Thiritthuvamae, Etthaal Naanatiyaen Kataitthaeruvan Enbavantheernthu Atthaa Unnaiyallaal Enakkaar Thunaiyaaruravae? 2. Emmaa Vikkuruki Uyireendha Puratthatharkor Kaimmaaruntukolo? Kataikaarungkaiyataivaay, Summaarasanaisey, Sol Sundharam Yaathumilaen, Ammaan, Unnaiyallaal Enakkaarthunai, Yaaruravae? 3. Thiraisaer Vembavamaam Katal Muzhkiya Theeyaremaik Karasaernthuykka Venrae Punaiyaayinai Kanniliyaan, Parasaen Parrukilaen, Ennaip Parriya Parruvittaay, Arasae, Unnaiyallaal Enakkaarthunai, Yaaruravae? 4. Thaayae, Thanthaidhamar Kurusambatthu Natpevaiyum Neeyae Emperumaan, Kathivaerilai Ninnayangkaan. “aeyae“ Enrigazhum Ulakotenak Kennurimai? Aayae, Unnaiyallaal Enakkaarthunai, Yaaruravae? 5. Pitthaerichsuzhalum Jegap Paeypitith Thuppavatthae Setthaen, Unnarulaal Pizhaitthaenmaru Jenmamathaay. Etthoshanggalaiyum Porutthenrum Irangkugavenru Atthaa, Unnaiyallaal Enakkaarthunai, Yaaruravae? 6. Thuppaar Sinthaiyilaen Maraintheettiya Tholvinaiyum Thappaathaeveli Yaanatunaalenaith Thaangkik Kolla, Ippaaruyyavenrae Manukkolametuttha Enggal Appaa, Unnaiyallaal Enakkaarthunai, Yaaruravae? 7.eentae Yennullatthil Visuvaasa Vilakkilanggath Thoontaa Yennilantho Mayal Soozhnthu Ketutthitungkaan Maantaa Yem Pizhaikkaay Uyirtthaayemai Vaazhvikkavae Aantaa Yunnai Yallaalenakkaar Thunai Yaaruravae? 8.maiyaar Kanniruntu Sevi Vaayataitthuk Kuzhari Aiyaal Moochsotungki Uyiraakkai Vittae Kitumnaal Naiyael Kai Vekivaenunai Naanun Panjjalena Aiyaa Unnaiyallaa Lenakkaar Thunai Yaaruravae?
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m A F#m A F#m B A E B E E G#m A F#m B A E B G#m E E G#m A F#m A F#m B A E B E E G#m A F#m B A E B G#m E E G#m A F#m A F#m B A E B E E G#m A F#m B A E B G#m E