பாடல் #5126
இயேசு தேவனை
🔤 Yesu Devanai
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தேவனை வாழ்த்திடுவோமே இன்ப துதிகள் செலுத்திடுவோமே எம்மை நேசிப்பவர் இவர் தாமே எங்கள் ஆத்தும இரட்சகராமே கண்ணின் மணிபோல காத்தார் கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர் சாலேமின் ராஜா சாரோனின் ரோஜா சமாதானப் பிரபு நம் இயேசுவே தேவ சமாதானம் நதி போல் தேவ வசனமோ பனி போல் கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில் கிருபையோடு வந்திறங்குதே நீதிமான்களைப் பனை போல் நல்ல கனி தரும் மரம் போல் வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய் வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார் வாசிப்போம் தினம் வேதம் நேசிப்போம் இயேசு நாமம் இறுதி காலம் விழிப்படைவோம் இடைவிடாமல் ஜெபித்திடுவோம் இயேசு நமக்காக வருவார் மேகமீதினில் ஒரு நாள் - முந்திக் கொள்வோம் நாம் இயேசுவை சந்திக்க மறுரூபமாய் பறந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Devanai Vaazhtthituvomae Inba Thuthigal Selutthituvomae Emmai Naesippavar Ivar Thaamae Enggal Aatthuma Iratsakaraamae Kannin Manipola Kaatthaar Kartthar Endhan Nal Maeyppar Saalaemin Raajaa Saaronin Rojaa Samaathaanap Pirapu Nam Yesuvae Thaeva Samaathaanam Nathi Pol Thaeva Vasanamo Pani Pol Kanmalai Vetippil Thangkitum Sapaiyil Kirupaiyotu Vanthirangkuthae Neethimaankalaip Panai Pol Nalla Kani Tharum Maram Pol Vaeli Ataitthitta Singkaara Vanamaay Varraadha Neerurraay Maarrukiraar Vaasippom Thinam Vaedham Naesippom Yesu Naamam Iruthi Kaalam Vizhippataivom Itaivitaamal Jepitthituvom Yesu Namakkaaga Varuvaar Maegameethinil Oru Naal - Munthik Kolvom Naam Yesuvai Santhikka Maruroobamaay Paranthituvom