பாடல் #466
ஆயிரமாய் பெருக வேண்டும்
🔤 Aayiramaay Peruga Vaentum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரமாய் பெருகவேண்டும் தேவா - நாங்கள் அதிசயங்கள் காணவேண்டும் தேவா உம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே! உமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே ஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்! ஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்! ஜீவாதிபதியே உம்மில் மூழ்கிறோம்! ஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்! அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் - நாங்கள் மன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்! கீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்! எதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்! ஒளிவீசும் தீபமாக வேண்டும் - நாங்கள் வாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்! மலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்! பாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiramaay Perugavaentum Thaevaa - Naanggal Athisayanggal Kaanavaentum Thaevaa Um Naamam Engkum Vella Vaentumae! Umathu Iraajyam Thuridhamaay Varavaentumae Jeeva Devanae Ummai Vaanjsikkinrom! Jeeva Naayakaa Ummai Saevikkinrom! Jeevaathibathiyae Ummil Moozhkirom! Jeeva Malarkalaay Nittham Malarnthidach Seyyum! Anpin Aazham Kaanavaentum Enrum - Naanggal Mannikkum Sinthaiyaal Niraiya Vaentum! Keezhpatidhal Aanandham Aakida Vaentum! Ethiraali Thanthiratthai Velvathae Inbam! Oliveesum Theebamaaga Vaentum - Naanggal Vaazhvin Jeeva Vaasanaiyaay Valamvara Vaentum! Malarchsipertra Samuthaayam Malarnthida Vaentum! Paarathamae Paralogamaay Maarida Vaentum!