பாடல் #46
அதிகாலையிலுமைத் தேடுவேன்
🔤 Athikaalaiyilumaith Thaetuvaen
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிகாலை யிலுமைத் தேடுவேன் முழு மனதாலே; - தே வாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே. இது காறும் காத்த தந்தை நீரே; இனி மேலும் காத்தருள் செய்வீரே, பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே, பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே! - அதி 1.போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா! - எப் போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா! ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா? எனக்கான ஈசனே! வான ராசனே! இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா! - அதி 2.பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது, - தப் பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது, விலகாது என் சமுகம் என்ற வாக்கில் தவறேது? விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட, விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது? - அதி 3.நரர்யாவர்க்குமுற்ற நண்பனாய் நடந்திட வையே! - தீ நாவின் பாவமற நன்மைகள் பொழிந்திடச் செய்யே! பரலோக ஆவியைநல் மாரி போலெனிலே பெய்யே! புகழார நாதனே! வேத போதனே! பூரணமாய் உனைப் போற்றுவேன், தினந் தினம் மெய்யே! - அதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athikaalai Yilumaith Thaetuvaen Muzhu Manathaalae; - Thae Vaaseer Vaadham Pera Naatuvaen Jeba Thapatthaalae. Ithu Kaarum Kaattha Thanthai Neerae; Ini Maelum Kaattharul Seyveerae, Pathivaaga Ummilae Naan Nilaikkavae, Patthiramaay Enai Utthamanaakkitum Thaevae! - Athi 1.ponaraamuzhuvathum Paathukaattharulina Pothaa! - Ep Pothum Enggaludaniruppathaay Uraittha Nal Naathaa! Eenappaavik Kaethuthunai Lokiluntu Porpaathaa? Enakkaana Eesanae! Vaana Raasanae! Indha Naalilum Oru Pandhamillaamal Kaarum Neethaa! - Athi 2.palasodhanaigalaal Soozhnthunaan Kalangkitumpothu, - Thap Paathu Ninkirupai Thaangkida Vaenum Appothu, Vilakaathu En Samugam Endra Vaakkil Thavaraethu? Visuvaasangkontu Meyp Paasamoontida, Vikkinam Yaavilum Verri Kaanuvaen Malaivaethu? - Athi 3.nararyaavarkkumurtra Nanpanaay Natanthida Vaiyae! - Thee Naavin Paavamara Nanmaigal Pozhinthidach Seyyae! Paraloga Aaviyainal Maari Polenilae Peyyae! Pugazhaara Naadhanae! Vaedha Podhanae! Pooranamaay Unaip Porruvaen, Thinan Thinam Meyyae! - Athi